பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இதில் வேடிக்கை எ என்னவென்றால், சுயமரியாதைத் திருமணங்கள் - இனிமேல் நடக்கின்ற திருமணங்களும் செல்லும்; இதுவரையில் நடந்துள்ள திருமணங்களும் சட்டப்படி செல்லும் என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தபொழுது தமிழக சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாடெங்கும். சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் சிலபேர் இந்தத் திருமண முறை தேவைதானா? என்ற சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய திருமண விழாக்கள் சுமார் முப்பதாண்டு காலத்திற்கு முன்பு நம்முடைய இல்லங்களில் நடைபெறுவது என்றால் முதலில் ஊரார் எதிர்க்கிறார்களோ இல்லையோ, வீட்டிற்குள்ளேயே பேரெதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியது இருக்கும். உறவினர்கள் ஒத்துப் போக மாட்டார்கள். இந்த முறை ஆகுமா? இது நீதி அல்லவா? குடும்பத்திற்கு ஆகுமா? குழந்தை பிறக்குமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி இப்படிப்பட்ட திருமணங்களுக்குத் தடை விதிக்கின்ற காலம் ஒன்று இருந்தது. சேலத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நான் பேசும்பொழுது, தமிழர் வீட்டுத் திருமணங்களில் தமிழர்களாக வீற்றிருக்கிற மணமக்களையும் மேடையிலே உட்காரவைத்துக் கொண்டு எதிரிலே ஆயிரக்கணக்கான தமிழ்க்குலத்து தாய்மார்களை ஆடவர்களை - தமிழ்க் குலத்து முதியோர்களை - முதிரா இளைஞர்களை உட்கார வைத்துக்கொண்டு யாருக்கும் புரியாத மொழியிலே மந்திரம் என்கிற பெயரால் வாழ்த்துவது அல்லது ஆசீர்வதிப்பது தமிழினத்திற்கே அவமானமில்லையா? நம்மை எல்லாம் தலைகுனிய வைக்கிற செயல் இல்லையா? என்று நான் கேட்டேன். இந்தக் கேள்வியை அடிப்படையாக வைத்து இன்றைக்கு சில பேர் நம்முடைய பழைய காலத் திருமண முறைகளெல்லாம் தலைகுனிவைத் தருகிறதா? இதைப் பற்றி ஆராயலாம்; வாருங்கள் என்று அதையும் வியாபாரமாக ஆக்குவதற்கு எண்ணிய சில பேர் கிளம்பியிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்லிக்கொள்வேன். என்னுடைய இல்லதத்தில் என்னுடைய நாட்டில் - என்னுடைய மொழியில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளைத்தான் தன்மானமுள்ள நிகழ்ச்சியாக நான் கருதுவேன். பிறிதொரு மொழியினுடைய ஆதிக்கத்திற்கு இந்த நிலம் அடிமைப்பட்டுக் கிடக்கிற வரையில் நாம் தலைகுனிந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதை இன்றைக்கு நான் திட்டவட்டமாக குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன். 2