பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல ஆண்டுகளுக்கு முன்னால், திராவிடர்க் கழகத் துவக்கக் காலத்தில் ஒரு சுயமரியாதைத் திருமணம் தஞ்சை மாவட்டம் பாபனாசத்தில். மணமகன் திராவிட இயக்கத்ததைச் சேர்ந்தவர். நான் என் நண்பன் தென்னன் யாவரும் தலைமை வகித்து உரையாற்ற அழைக்கப்பட்டுச் சென்று கொண்டிருந்தோம். அதே நாளில் எனது மைத்துனர் சிதம்பரம் C.S. ஜெயராமனின் திருமணம் வேறோர் ஊரில் நடைபெறுகிறது. மைத்துனரின் திருமணத்தைக் கூடத் தவிர்த்துவிட்டு சுயமரியாதைத் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்துடன் சென்றிருந்தோம். மணமகனைத் தவிர்த்த மாப்பிள்ளை வீட்டார் கதர்ச் சட்டைக்காரர்கள் - தேசீயக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ம் 66 99 என்று மணவிழாப் பந்தலின் வாசலிலே எங்களைத் தடுத்து கருப்புச் சட்டைக்காரன் யாரும் பந்தலுக்குள்ளேயே வரக்கூடாது கூச்சலிட நாகரீகம் கருதி நாங்கள் யாவரும் ஊருக்கு வெளியே குளக்கரையில் போய் அமர்ந்துவிட்டோம். - கருப்புச் சட்டை அணியாத நாங்கள் அனுப்பிய எங்கள் தோழர் ஒருவர் திருமணத்திற்குப் போய் வந்து அய்யர் மந்திரமோத புரோகித முறையில் திருமணத்தை நடத்தி முடித்ததைச் சொன்னார். வழக்கமாய் மணமேடையில் பெண்தான் அழுதுகொண்டிருப்பார். தன்னுடைய விருப்பம் நிறைவேறவில்லையே என்று இங்கே மாப்பிள்ளை அழுதுகொண்டிருந்த விசித்திரம் நடைபெற்றது: தாலி கட்டியவுடன் புதிய உரிமையுடன் மணமகன் எங்களை அழைத்து மணவிழாவை வாழ்த்திப் பேசச் சொல்ல நானும் சென்று ஒரு மணிநேரம் உரையாற்றினேன். வந்திருந்த பெரும்பாலோர் நமது கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள். அடுத்தது விருந்து பரிமாற்றம். நாங்களும் எல்லோரோடும் சாப்பிட உட்கார்ந்தோம். அங்கும் பரிமாறுகிற இடத்தில் சில கதர்ச் சட்டைக்காரர்கள் கையில் உணவுப் பண்டங்களுடன் நின்றார்கள். எல்லோருக்கும் பரிமாறினார்கள் எங்களைத் தவிர. வெறும் இலையில் பந்தி முடிகின்ற வரையில் நாகரீகம் கருதி அமர்ந்திருந்து சாப்பிடாமலேயே எழுந்து வந்தோம். இந்தக் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லத்தான் எத்தனை அவமானங்கள் இழிவுகள் சோதனைகள்! 66 - - இந்த இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்த நேரத்திலும்-வேதனைகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டங்களைச் சந்தித்த போதும், இந்த இயக்கத்தை இருக்க விடுகிறேனா, பார்; கூண்டோடு அழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன், பாருங்கள்!" என்று அறைகூவல் விட்டவர்கள் முன்பு 3