பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் நம்முடைய வெற்றி பெருமிதத்தைக் காட்டுகிறோம் என்றால், அது தேர்தலிலே ஏற்படுகின்ற வெற்றி, தோல்விகள் என்ற அடிப்படையில் அல்ல; நம்முடைய கொள்கைகள் இன்று வளர்ந்திருச்கிறது. இந்த மணப்பந்தலில் நான் பார்க்கிறேன். நூற்றுக்கணக்கானவர்கள் ஆடவரும், பெண்டிரும் குழுமியிருந்து மணமக்களை வாழ்த்துகின்ற காட்சியைப் பார்க்கிறேன். அந்த அளவிற்கு இந்தக் கொள்கை போற்றப்பட்டு, வரவேற்கப்பட்டுள்ள ஒரு நிலையை எய்தி இருக்கிறது. திருமணம் அன்றும் இன்றும் 199 முன்பு நடைபெற்ற திருமணங்களில் புரியும்படியாக வாழ்த்துக்களைக் கேட்டிருக்க முடியாது. புரோகிதர்கள் புடைசூழ நடைபெறும் திருமணங்கள்-அவர்கள், சாட்சிக்கு இங்கே அமர்ந்திருக்கிற மனித உருவங்களை எல்லாம் அழைத்து உங்களுடைய சாட்சியாக இந்தத் திருமண விழாவை நான் நடத்தி வைத்திருக்கிறேன். மணமக்கள் எல்லா நலன்குளம் பெற்று வாழவேண்டுமென்று வாழ்த்துங்கள் என்று தெளிவாக பேசுகிறோமே, அப்படி அவர்கள் சொல்வது கிடையாது. அவர்கள் அழைக்கின்ற சாட்சிகள் எல்லாம் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிராம் ரிஷிகள், கந்தர்வர், கின்னரர், கிம்புருடர், அட்டதிக்கு பாலகர்கள் என்று இப்படி அந்தக் கடவுள் பட்டாளத்தை அழைத்து, அது போதாது என்று அக்கினி சாட்சியாக, அருந்ததி சாட்சியாக, நடைபெற்ற அந்தத் திருமணங்களை ஒரு காலத்தில் நாம் கண்டோம். ஆனால், அந்தத் திருமணமுறை இன்றைக்கு மாற்றப்பட்டு விட்ட காரணத்தால் அப்படி மாற்றிக்கொண்ட மணத் தம்பதிகளின் வாழ்க்கையில் ஏதாவது ஏமாற்றங்கள் உண்டா என்று இரண்டு முறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அய்யரை வைத்து நடத்திய திருமணமானாலும் - அண்ணாவை - அய்யாவை - எங்களை வைத்து நடத்துகின்ற திருமணமானாலும் - இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நேரத்தில் அவரவர்களுடைய மன இயல்புகளுக்கு ஏற்ப, அவரவர்கள் வகுத்துக் கொள்கின்ற வாழ்க்கை முறைகளுக்கேற்ப, அவர்களுடைய வாழ்வு அமைகிறதே அல்லாமல், 'அய்யர் வைத்து நடத்தினார், ஆகவே அமோகமாக வாழ்கிறார்கள்; சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற்றது; அதனால் அவர்களுடைய வாழ்க்கை சரியாக அமையவில்லை!' என்று சொல்லத்தக்க விதத்தில் இந்தத் திருமண முறைகளில் விளைவுகள் இல்லை. குடும்பக் கட்டுப்பாடு na . அய்யரை வைத்துத் திருமணம் நடத்திய எத்தனையோ இல்லங்கள் குழந்தை இல்லாமல் காசிக்கும் ராமேசுவரத்திற்கும் 4