பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாத்திரை செய்கின்ற கதைகளை எல்லாம் பார்த்திருக்கிறோம். நாம் சில கழக நண்பர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை ஓராண்டு காலம் கூட நானோ, பேராசிரியரோ வந்து நடத்திவைக்க வேண்டும் என்பதற்காகத் தள்ளி வைத்துவிடுகிறார்கள். அது எனக்கு நல்லதாகக் கூடத் தோன்றுகிறது. ஏனென்றால் ஒரு குழந்தை பிறப்பது ஒரு வருட காலத்திற்கு நிச்சயமாகத் தடுக்கப்படுகிறது. குடும்பநலத் திட்டத்தின் அடிப்படையில் கூட நான் சில நேரங்களில் அவர்களுடைய உறுதியை வரவேற்பதுண்டு. அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்ற கருத்தினை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நாங்கள் அரசுப் பொறுப்பிற்கு வந்த அந்தக் காலத்திலே மாத்திரமல்ல. இந்த இயக்கத்தினுடைய ஆணிவேராக இன்றைக்கும் இருக்கின்ற சுயமரியாதை இயக்கத்தினுடைய தொடக்க காலத்திலேயே இத்தகைய குடும்ப நலத் திட்டக் கருத்தை நாங்கள் எடுத்துச் சொல்லி வந்து இருக்கிறோம். முள்வேலியும் பட்டுத் துணியும் - TUB சமுதாயத்திலே ஏற்பட்டு விட்ட புறையோடிப்போன பல நிலைகளை நாம் மெல்ல மெல்லத்தான் பக்குவமாகத்தான் - பிறருடைய மனம் புண்படாமல், அதே நேரத்திலே பண்படுத்துகின்ற அளவிலே நம்முடைய கொள்கைகளை அவர்களுடைய உள்ளத்திலே பதிய வைக்க வேண்டியிருக்கிறது என்பதை நான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சொற்பொழிவாளர்கள் கூட்டத்திலேயும் சரி, கழகத்தினுடைய பொதுக்குழுக் கூட்டங்களிலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, நான் விளக்கி வந்திருக்கிறேன். நான் சில நாட்களிலே கலந்து கொள்ள இருக்கின்ற ஒரு திருமணவிழா அது. பெரியாருடைய கொள்கை வழி நிற்கின்றவருடைய வீட்டுத் திருமண விழா. அந்தத் திருமண விழாவிற்கு நான்தான் தலைமையேற்கிறேன். ஒரு வாரத்திற்கு முன்ப அவர்கள் அந்தத் திருமண அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனார்கள். படம் அதிலே தந்தை பெரியார் அவர்களுடைய அச்சடிக்கப்பட்டு - திருமண விழாவிற்கு நான் தலைமை 5