பக்கம்:மணி பல்லவம் 1.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

121

“அந்த வேண்டுகோளை இப்போது இங்கே பொது இடமான நடுவீதியில் வைத்துக் கொண்டு உன்னிடம் கூறுவதைவிடப் படைக்கலச் சாலைக்குச் சென்றபின், ‘நீலநாக மறவரே உனக்குத் தெளிவாக எடுத்துக் கூறும்படி செய்யலாம்’ என்று நண்பர்கள் கருதுகிறார்கள்.”

“நண்பர்கள் கருதுவதைப்பற்றி எனக்கு மகிழ்ச்சிதான். என்னிடம் சொல்லாமலே என்னென்னவோ திட்டமிட்டுக் கொண்டு செய்கிறீர்கள். எனக்குக் கெடுதலாக ஒன்றும் செய்துவிட மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்பலாம். ஆனால் ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கவலைப்பட்டுப் பயந்து கொண்டிருப்பது போல் இந்தப் பெரிய நகரத்தின் இருண்ட வனங்களிலோ, ஆள் பழக்கமற்ற கடற்கரை ஒதுக்கங்களிலோ, ‘இளங்குமரனை’ யாரும் அவ்வளவு எளிதாகக் கொன்றுபோட்டுவிட முடியாது...!”

இப்படி இந்த வாக்கியத்தின் அமங்கலமான கடைசிப் பகுதியை இளங்குமரன் சொல்லி முடிப்பதற்குள் கதக்கண்ணன் அருகில் வந்து அவன் வாயைப் பொத்தி விட்டான்.

“பித்தனைப்போல் இதென்ன பேச்சு, இளங்குமரா? உன் மேல் அன்பும், பற்றும் உள்ளவர்கள் உனக்காக அநுதாபப்படுவதற்குக்கூட உரிமையற்றவர்களா? அந்த அநுதாபத்தையும் அக்கறையையும் 'நீ ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறாய்?”

“சில சமயங்களில் என்மேல் அநுதாபப்படுகிறவர்களுக்காக நானே அநுதாபப்படும்படி நேர்ந்து விடுகிறது. என்னைக் கோழையாக்க முயல்கிற அநுதாபத்தை நான் ஒப்புக் கொள்ள முடிவதில்லை! என்னைப் பற்றி எனக்கு என் மனத்தில் எவ்வளவு தன்னம்பிக்கையும், உரமும் உண்டோ , அதில் அரைப்பகுதியாவது மற்றவர்களுக்கும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். அப்படி இருந்தால்தான் மற்றவர்கள் என்னைத் தைரியமுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/122&oldid=1141793" இலிருந்து மீள்விக்கப்பட்டது