பக்கம்:மணி பல்லவம் 1.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

மணிபல்லவம்

அவ்வளவு பெரிய வீராதி வீரர் தன்னை முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு புகழும்போது தான் என்ன மறுமொழி பகர்வதென்று தோன்றாமல் சற்றே நாணினாற் போல் தலைகுனிந்து நின்றான் இளங்குமரன்.

"வா, போகலாம்! உன்னிடம் தனிமையில் சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன” என்று கூறி அவனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நீலநாக மறவர். குலத்துக்கொரு பிள்ளையாய் வந்த குமரனைத் தந்தைப் பாசத்தோடும் பரிவோடும் அழைத்துச் செல்வது போல இருந்தது அந்தக் காட்சி, ‘மகாமேருமலை போன்ற அந்த வீரவேந்தர் இப்படித் தோள்மேல் கையிட்டுத் தழுவி அழைத்துக் கொண்டு செல்லும் பாக்கியங்கள் தங்களுக்கு ஒருமுறையாவது வாய்க்காதா?’ என்று ஏங்கும் இளைஞர்கள் பலர் அப்போது அங்கே இருந்தனர். அப்படி ஏங்கிய பலரில் அரச குடும்பத்துப் பிள்ளைகளும், வேளிர்குலச் செல்வர்களும் பட்டினப்பாக்கத்துப் பெருவணிகர் வீட்டு இளைஞர்களும் இருந்தனர்.

“நண்பர்களே வாருங்கள்! ஆசிரியர்பிரானிடம் பேசிவிட்டு இளங்குமரன் திரும்பி வருகிறவரை நாம் இப்படி இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம்” என்று கதக்கண்ணன் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு மாமரத்தடியில் போய் அமர்ந்தான். மற்ற இளைஞர்களும் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சென்றார்கள். அவ்வாறு பிரிந்து செல்லும்போது சற்றே திமிர் கொண்டவன்போல் தோன்றிய வேளிர்குலத்து இளைஞன் ஒருவன் “பெற்றவர் பெயர் தெரியாத பிள்ளைகளெல்லாம் வில்லாதி வில்லர்களாகி விடுகிறார்கள். ஒருவேளை வில்லாதி வில்லனாகப் பெருமை பெற வேண்டுமானால் பெற்றவர் பெயர் தெரியாத பிள்ளையாயிருக்க வேண்டும் என்பதுதான் தகுதியோ என்னவோ” என்று சொல்லி ஏளனமாகச் சிரித்ததையும் அவனுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/157&oldid=1141910" இலிருந்து மீள்விக்கப்பட்டது