பக்கம்:மணி பல்லவம் 1.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

மணிபல்லவம்

கொண்டோம்” என்று தனக்குத்தானே வருந்தி மனங் குமுறினான் இளங்குமரன்.


21. மணிமார்பனுக்குப் பதவி

சுரமஞ்சரியும் வசந்தமாலையும் சில கணங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளத் தோன்றாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றார்கள். ஊசி கீழே விழுந்தாலும் ஓசை பெரிதாகக் கேட்கும்படியானதொரு நிசப்தம் அப்போது அந்த அலங்கார மண்டபத்தில் நிலவியது. மோனத்தைக் கலைத்து முதலில் பேச்சைத் தொடங்கியவள் வசந்த மாலைதான். மெல்லிய குரலில் தலைவியை நோக்கிக் கேட்கலானாள் அவள்—

“அது ஏனம்மா அப்படி செம்பஞ்சுக் குழம்பையெல்லாம் வாரி இறைத்து வீணாக்கினீர்கள்? திரைக்கு அப்பால் நின்று ஒட்டுக் கேட்டது யாரென்று தெரிந்து கொண்டிருக்க வேண்டுமானால் மெல்ல நடந்து போய்த் திரையையே விலக்கிப் பார்த்திருக்கலாமே! அப்படிப் பார்த்திருந்தால் ஒட்டுக் கேட்டவர்களுக்கும் ஒரு பாடம் கற்பித்திருக்கலாமே?”

“போடி அசட்டுப் பெண்ணே! பிறர் நாகரிகமாக நமக்குச் செய்கிற பிழைகளைக் கண்டுபிடித்துத் தீர்வு காண முயலும்போது நாமும் நாகரிகமாகவே நடந்து கொள்ள வேண்டும். முன்யோசனை இல்லாமல் திடீரென்று போய்த் திரையைத் திறந்துவிட்டு நாம் முற்றிலும் எதிர்பாராத ஆள் அங்கு நிற்பதைக் காண் நேர்ந்து விட்டால் நமக்கும் வேதனை, அவருக்கும் வேதனை. ஒருவேளை திரைக்கு அந்தப் பக்கம் நின்றவர் நீயும் நானும் பாடம் கற்பிக்க முடியாதவராக இருக்கலாம். பார்த்தபின், ‘ஐயோ! இவராயிருக்குமென்று தெரிந்திருந்தால் இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/161&oldid=1141931" இலிருந்து மீள்விக்கப்பட்டது