பக்கம்:மணி பல்லவம் 1.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

207

அனுப்பிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்படியே ஓவியன் எங்கேயாவது ஓடிப்போய் விட்டானோ என்று நினைத்தாள் அவள். அப்படி அவள் சந்தேகப்படுவதற்கும் நியாயமிருந்தது.

அந்த மாளிகையில் தொடர்ந்து இருப்பதற்குத் தான் விரும்பவில்லை என்ற கருத்தை அவளிடம் மடலை வாங்கிக் கொண்டு புறப்படுமுன்பே அவன்தான் சொல்லியிருந்தானே!

சிறிது நேரத்துச் சிந்தனைக்குப் பின்பு ஏதோ தீர்மானமாக முடிவு செய்து கொண்டவள் போல் உட்கார்ந்தபடியே உறங்கிப் போயிருந்த தன் தோழி வசந்தமாலையை எழுப்பினாள் சுரமஞ்சரி.

“என்னம்மா? மடல் கொடுக்கப்போன ஓவியன் திரும்பி வந்தாயிற்றா?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து நின்றாள் வசந்தமாலை. இனிமேல் அவனை எதிர் பார்த்துக் காத்திருப்பதிலும் பயனில்லை, நீ புறப்படு. நாமே போகவேண்டியதுதான்!” என்று அந்த அகாலத்தில் தலைவியிடமிருந்து பதில் வந்தபோது வசந்தமாலை திகைத்துப் போனாள்.

“ஓவியன் வராவிட்டால் நாளைக் காலை வரையில் அவனை எதிர்பார்க்கலாம். அதற்காக இந்த வேளையில் நாம் எப்படி அங்கே போக முடியுமா? போவதுதான் நன்றாயிருக்குமா? ஏறக்குறையப் போது விடிவதற்கே சில நாழிகைகள்தான் இருக்கும். இப்போது அங்கே போக வேண்டுமானால் நடந்து போக முடியாது. பல்லக்கில் போகலாமென்றால் தூக்கி வருவதற்குப் பணியாட்களை எழுப்ப இயலாது; பேசாமல் படுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று வசந்தமாலை தடை செய்வதை சுரமஞ்சரி பொருட்படுத்தவில்லை.

“சொன்னால் சொன்னபடி கேள். இந்தக் காரியத்தை இப்போதே செய்து தீர வேண்டுமென்று என் மனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/208&oldid=1142016" இலிருந்து மீள்விக்கப்பட்டது