பக்கம்:மணி பல்லவம் 1.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

209

நாளங்காடியின் அடர்ந்த மரக் கூட்டங்களுக்கிடையே உள்ளே சாலையைக் கடந்து தேர் மருவூர்ப் பாக்கத்துக்குள் புகுந்த போது, தேரை நிறுத்தாமலே பின் பக்கமாகத் திரும்பி, “அவர் தங்கியிருக்கிற படைக்கலச் சாலைக்குப் போகும் வழியைச் சொல்லிக் கொண்டு வா” என்று தோழிக்கு உத்தரவு பிறப்பித்தாள் சுரமஞ்சரி. தோழி வசந்தமாலை வழியைக் கூறினாள். தேர் அவள் கூறிய வழிகளின் படியே மாறியும் திரும்பியும் விரைந்து சென்றது.

★★★

விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும்போதே நீலநாக மறவருக்கு உறக்கம் நீங்கி விழிப்புக் கொடுத்து விடும். படைக்கலச் சாலையின் எல்லையில் முதன் முதலாகக் கண் விழிக்கிறவர் அவர்தான். எழுந்தவுடன் இருள்புலரு முன்பாகவே ஆலமுற்றத்தை ஒட்டிய கடற்கரை ஓரமாக நெடுந்தொலைவு நடந்துபோய் விட்டுத் திரும்பி வருவார் அவர். கடற்காற்று மேனியில் படுமாறு அப்படி நடந்து போய்விட்டு வருவதில் அவருக்குப் பெரு விருப்பம் உண்டு. கதிரவன் ஒளிபரவு முன்பே தமது உடல் வலிமைக்கான எல்லாப் பயிற்சிகளையும் முடித்துக் கொண்டு நீராடித் தூய்மை பெற்று விடுவார் அவர். நீலநாக மறவர் நீராடிவிட்டுப் புறப்படுவதற்கும், ஆலமுற்றத்து அண்ணல் கோவிலில் திருவனந்தல் வழிபாட்டு மணி ஒலி எழுவதற்கும் சரியாயிருக்கும்.

வழக்கம்போல் அன்று அவர் துயில் நீங்கிக் கடற்கரையில் தனியே உலாவி வருவதற்காகப் புறப்பட்டுப் படைக்கலச் சாலையின் வாயிலுக்கு வந்தபோது அங்கே வெண்புரவிகள் பாய்ந்து இழுத்துவரும் அலங்காரத்தேர் ஒன்று அழகாக அசைந்து திரும்பி வந்து நிற்பதைக் கண்டு வியப்படைந்தார்.

அந்தத் தேரிலிருந்து இரண்டு பெண்கள் இறங்கி வருவதைக் கண்டபோது நீலநாக் மறவரின் வியப்பு இன்னும் மிகையாயிற்று. படைக்கலச் சாலைக்குள்

ம-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/210&oldid=1142019" இலிருந்து மீள்விக்கப்பட்டது