பக்கம்:மணி பல்லவம் 1.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

239

ஆனால் என்ன மாயமோ? ஆலமுற்றத்தில் பெரிய மர வீழ்துகளின் அமர்த்தியில் அந்தப் பெண்கள் வேகமாக எங்கே மறைந்தார்கள் என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரமும் திகைப்பும் மாறிமாறித் தோன்ற அவன் ஆலமரத்தடியில் நின்றபோது அவனால் அப்போது அங்கே முற்றிலும் எதிர்பார்க்கப்படாத வேறு இரண்டு மனிதர்கள் அவனுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.

அன்று பட்டினப் பாக்கத்திலிருந்து அவனைப் பின் தொடர்ந்த ஒற்றைக்கண் மனிதனும், சுரமஞ்சரியின் தந்தையும் அவன் எதிரே வந்து வழியை மறித்துக் கொள்கிறார் போல நின்றார்கள்.

“என்ன தம்பீ! மிகவும் உடைந்து போயிருக்கிறாயே? அருட்செல்வ முனிவர் காலமான துக்கம் உன்னை மிகவும் வாட்டிவிட்டது போலிருக்கிறது” என்று விசாரிக்கத் தொடங்கிய சுரமஞ்சரியின் தந்தைக்குப் பதில் சொல்லாமல் வெறுப்போடு வந்த வழியே திரும்பி நடக்கலானான் இளங்குமரன். “சிறிது பேசிவிட்டு அப்புறம் போகலாமே தம்பீ!” என்று கூறிக் கொண்டே உடன் நடந்து வந்து பிடி நழுவாமல் இளங்குமரனின் கையை அவனே எதிர்பாராத விதமாக அழுத்திப் பிடித்தார் அவர்.


32. மாறித் தோன்றிய மங்கை

த்திரத்தோடு திரும்பிச் சுரமஞ்சரியின் தந்தையை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன், அவனுடைய கையை அழுத்திப் பற்றியிருந்த அவர்பிடி இன்னும் தளரவில்லை.

“கையை விடுங்கள் ஐயா!” என்று அவன் கூறிய சொற்களைக் கேட்டு அவர் மெல்ல நகைத்தார். அந்த நகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/240&oldid=1142055" இலிருந்து மீள்விக்கப்பட்டது