பக்கம்:மணி பல்லவம் 1.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

245

கருத்தில் பிடிவாதமாக இருந்தே பேச்சை முடித்தான் இளங்குமரன்.

அருகில் நெருங்கிச் சிரித்துக் கொண்டே மறுபடியும் அவன் கைகளைப் பற்றினார் சுரமஞ்சரியின் தந்தை. முன்பு பிடித்தது போலன்றி அன்புப் பிடியாக இருந்தது இது. ஆனால் இந்த அன்புப் பிடியிலும் ஏதோ வஞ்சகம் இருப்பதை இளங்குமரன் உணர்ந்தான்.

“நீ சாதுரியமானவன் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை தம்பீ! இப்போது நாங்கள் இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டு விடுகிறோம். அதோ நிற்கிறவள் சுரமஞ்சரியேதான். உன்னுடைய திறமையைப் பரிசோதிப்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் என்னென்னவோ சொல்லி உன்னை ஏமாற்ற முயன்றோம். நீ இறுதிவரை உறுதியாக இருந்து உண்மையை வற்புறுத்தி விட்டாய். உன்னுடைய நினைவாற்றலைப் பாராட்டுகிறேன்” என்று தன் கையைப் பிடித்துக்கொண்டே தழுவிக் கொள்கிறார். போல் அருகே நெருங்கிக் குழைந்த போது இளங்குமரன் அவர் பிடியிலிருந்து விலகித் தன்னை விடுவித்துக் கொண்டான்.

‘கையை விடுங்கள் ஐயா? நான் யாருக்கும் பிடி கொடுக்காதவன் என்று நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்களே?’ என்று அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு இளங்குமரன் திரும்பி நடந்து போது, “நீ யாருக்கும் பிடி கொடுக்காதவன்தான் தம்பி! ஆனால், இப்போது என்னிடம் சரியாகப் பிடி கொடுத்திருக்கிறாயே!” என்று சூழ்ச்சிப் புன்னகையோடு மர்மமான குரலில் கூறினார் அவர்.

வேறு பொருள் செய்துகொள்ள இடமிருந்து இந்தச் சொற்களை அவ்வளவுக்குப் பெரியனவாக மனத்தில் ஏற்றுக் கொண்டு சிந்தனையை வளர்க்காமல் வந்த வழியே திரும்பி படைக்கலச் சாலையை நோக்கி நடந்தான் இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/246&oldid=1142061" இலிருந்து மீள்விக்கப்பட்டது