பக்கம்:மணி பல்லவம் 1.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

277

“ஏன் பேசாமல் இருக்கிறாய்? உனக்குத் தலையணை இன்றி உறக்கம் வராதென்றால் என் கையை அணையாகத் தருகிறேன். இது பொதுவாக உன்மேல் எனக்கு ஏற்படும் கருணையைக் கொண்டு நான் செய்யும் உதவி. விரும்பினால் ஏற்றுக்கொள், இல்லாவிட்டால் நின்று கொண்டே இரு” என்றான் கடுமையாக.

செம்பொன் நிறத்துச் செங்கமலப் பூவணை போன்ற அவன் வலது தோளில் தலை சாய்த்தாள் சுரமஞ்சரி. அவள் மனத்தில் நினைவுகள் மிக மெல்லிய அரும்புகளாக அரும்பிக் கொண்டிருந்தன.

அப்போது, “பெண்ணே ! இப்போது இன்றிரவு என் தாயோடு இந்தத் தீவில் தங்க நேர்ந்து அவளுக்குத் தலையணை இல்லாமல் உறங்க முடியாது போயிருந்தாலும் இதே வலது தோளைக் கருணையோடு அவளுக்கு அளித்திருப்பேன் நான். பிறருக்கு உதவுவதே பெருமை. அதுவும் இயலாதவர்களுக்கு உதவுவது இன்னும் பெருமை” என்று நிர்மலமான குரலில் கூறினான் இளங்குமரன்.

“நான் ஒன்றும் இயலாதவளில்லை, எனக்கு உங்களிடமிருந்து அன்பு வேண்டும்; கருணை வேண்டியதில்லை” என்று சீற்றத்தோடு அந்தத் தோளைத் தள்ளி விட்டுத் துள்ளி எழுந்தாள் சுரமஞ்சரி. அவள் இதயத்து ஆசை அரும்புகள் வாடி உதிர்ந்தன.


38. உள்ளத்தில் ஒரு கேள்வி

ரிவும், ஏக்கமும், பசியும், குளிருமாகக் கழிந்த அந்த நீண்ட இரவுக்குபின் கப்பல் கரப்புத் தீவில் பொழுது புலர்ந்தபோது மங்கல நீராடி எழுந்த கன்னிகைபோல் தீவு முழுவதும் புத்தழகு பூத்திருந்தது. மழை இரவுக்குப் பின்னர் விடியும் காலை நேரத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/278&oldid=1142100" இலிருந்து மீள்விக்கப்பட்டது