பக்கம்:மணி பல்லவம் 1.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

95

அருகில் நின்று கொண்டிருந்தவளையும் எதிர்ப்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தவளையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் மனத்தில் தாங்க முடியாத வியப்பு ஏற்பட்டது. ஓவியன் மணிமார்பனும் வரைவதை நிறுத்திவிட்டு விழிகள் அகல அந்த அதிசயத்தைக் கண்டான்.

“அவர்கள் உயிரும், உணர்வும் உடைய பெண்களா, அல்லது ஒரே அச்சில் வார்த்து அணிந்தும் புனைந்தும், உடுத்தும், அலங்கரிக்கப்பெற்ற இரண்டு பொற்பாவைகளா?”

அந்த இருவரில் யார் சுரமஞ்சரி? யார் மற்றொருத்தி?’ என்று அறிய மாட்டாமல் இளங்குமரனும் ஓவியனும் திகைத்து மயங்கிய போது எதிர்ப்பக்கத்திலிருந்து வந்தவள் அவர்களுடைய திகைப்பைத் தீர்த்து வைத்தாள்! “இவளும் நானும் இரட்டைப் பிறவிகள், இவளுடைய பெயர் வானவல்லி. என்னுடைய பெயர் சுரமஞ்சரி. பெயரளவில் தான் எங்களுக்குள் வேற்றுமை. தோற்றத்தில் வேற்றுமை கண்டுபிடிக்க முயல்கிறவர்கள் பெரும்பாலும் ஏமாந்து தான் போவார்கள்” என்று கூறியவாறே இளங்குமரனுக்கும் ஓவியனுக்கும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் சகோதரி வானவல்லிக்கு அருகில் வந்து அவளுடைய தோளைத் தழுவினாற் போல் நின்று கொண்டாள் சுரமஞ்சரி. அதன் பின்புதான் இளங்குமரனுக்கும் ஓவியனுக்கும் மனத்தில் ஏற்பட்ட குழப்பம் ஒருவாறு நீங்கியது.

‘வானவல்லி என்று மின்னல் கொடிக்குப் பெயர், வானில் படரும் ஒளிக்கொடி போல் மின்னல் இலங்குவதால் யாரோ கவியுள்ளம் படைத்தவர்கள் தமிழில் மின்னல் கொடிக்கு இந்தப் பெயர் சூட்டிருக்கிறார்கள். ஆனால் விண் மண்டலத்து. மின்னற் கொடியைக் காட்டிலும் இந்த மண் மண்டலத்துப் பூம்புகார் மின்னற் கொடிக்கு எவ்வளவு இயைபாக இருக்கிறது இப்பெயர்!’ என்று தனக்குள் நினைத்தவாறே வானவல்லி என்னும் எட்டிகுமரன் வீட்டு மின்னல் கொடியை ஓவியனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/96&oldid=1141761" இலிருந்து மீள்விக்கப்பட்டது