பக்கம்:மணி பல்லவம் 3.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564

மணிபல்லவம்


ஒன்றை மற்றொன்று தழுவ நெருங்கும் வேட்கைக்கு 'ஒருவர் ஒருவரை இன்றி அமையாமை என்று அகப் பொருள் நூல்களில் பதசாரம் சொல்லியிருக்கிறார்கள், தோழி.” t . . . -

"எந்தப் பதத்துக்கு எந்த நூலில் எப்படிப் பொருள் சொல்லியிருந்தால் என்ன அம்மா? மனத்தில் முதிர்ந்து முற்றி முறுகியவைகளாகக் கன்றிப்போன உணர்ச்சி களின் ஆழத்தை அளப்பதற்கு ஒரு மொழியிலும் சரியான பதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீங்கள் பலமுறை சொல்லியதுதான் நிலைத்த உண்மை யாக நிற்கும்போல் இருக்கிறது.” .

"வசந்தமாலை ! இந்த வேட்கைமுள் மனத்தில் தைத்த நாளிலிருந்து நான்தான் எல்லா வேதனைகளை யும் பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்குக் காரணமான வர் என்னவோ இந்த வினாடிவரை ஒரே விதமாகத் தான் இருக்கிறார். எதற்கும் அடிமைப்படாத இரும்பு மனிதர்களைக்கூட அன்புக்கு அடிமைப்படுத்தலாம் என்று அறநூல் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், என்னுடைய மனத்தில் வேட்கையைப் பிறப்பித்தவரா கவும், வேட்கையாகவும், வேட்கையைத் தீர்க்கும் மருந்தாகவும்-எல்லாமுமாகவும் அமைந்திருக்கிற சுந்தர இளைஞரோ, அன்பைக்கூடப் பிறரிடமிருந்து ஏற்றுக் கொள்ளத் தயங்கும் அளவுக்குத் தன்மானம் உள்ளவராக இருக்கிறாரே! இன்றைக்கு நாளங்காடியில் நடந்த நிகழ்ச்சி அவருடைய தன்மானத்தில் கோபத்தையும் கலந்திருக்கும் - என் தந்தையாரின் சதிக்கு உடந் தையாக இருந்துகொண்டு நானே அவரைச் சூழ்ச்சி யால் கொல்ல விரும்புகிறேன் என்றுகூட அவர் நினைத் திருக்கலாம்..” - - • , •

"நிச்சயமாக அவர் அப்படி நினைத்திருக்க மாட்டார் அம்மா! உங்கள் மனம் அளவற்றுக் கலங்கிப் போயிருக்கிற காரணத்தால் நீங்களாகவே அவருடைய குணத்தை மாற்றி மாற்றி நினைத்துக்கொண்டு வீணாக வருந்துகிறீர்கள். கோபதாபங்களுக்கு ஆட்படுகிற சிறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/114&oldid=1144501" இலிருந்து மீள்விக்கப்பட்டது