பக்கம்:மணி பல்லவம் 3.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572

மணிபல்லவம்


எதிர்பார்த்துச் செய்யும் நோன்புகளைச் சீல விரதங்கள் என்று பெயரிட்டுச் சமய நூல்கள் கூடக் குறைவாகத் தானே மதிப்பிடுகின்றன?” -

"நான் சமய நூல்களைப் படிக்கவில்லை. இந்த உலகத்தில் நான் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான். அந்த அன்பை உங்களோடு வாதிட்டுத் தோற்கவும் நான் விரும்பவில்லை.”

நாளங்காடியில் சமயவாதிகளின் பெரிய பெரிய கேள்விகளையெல்லாம் அழகாகவும் ஆணித்தரமாகவும் கூறிய மறுமொழிகளின் மூலம் வென்ற இளங்குமரன் பேதமை ஒன்றைத் தவிர வேறெதுவும் கற்றறியாத முல்லை என்னும் இளம்பெண்ணுக்கு முன்னால் இப்போது தயங்கினான். திகைத்தான். - இந்த உலகத்தில் நான் பகுத்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான்!” என்று சொல்லிக்கொண்டே, கண்ணிரும் அழுகையும் பொங்க எதிரே வந்து நிற்கும் இந்தப்பெண்ணுக்கு இன்று நான் என்ன பதில் சொல்வது? என்று அவன் மனத்தில் பெரிதாய் ஒரு கேள்வி எழுந்தது. -

அன்புக்குச் சமயம் ஏது? வாதம் ஏது? தர்க்கம் ஏது? எந்தப் பிரமாணத்தைச் சொல்லி அதை எப்படி மறுப்பது? எதிரே நிற்கும் முல்லையின் மனத்தைப் போலவே மேலே நிர்மலமாய்க் களங்கமற்றிருந்த ஆகாயத்தைப் பார்த்தான் இளங்குமரன். யாருக்குச் சொல்வதற்குப் பதில் கிடைக்காமல் அவன் ஆகாயத்தில் அதைத் தேடிக் கொண்டிருந்தானோ, அவள் தன்னுடைய சுந்தரமணித் தோள்களை, அவை தனக்குப் பதில்கள் என்பதுபோலப் பார்க்கலானாள். கடற்காற்று ஆனந்தமாக வீசிக்கொண்டிருந்தது. மயில் இன்னும் நன்றாகத் தோகை விரித்து ஆடிக்கொண் டிருந்தது. முல்லைக்கும் இளங்குமரனுக்கும் நடுவில் நின்ற குட்டிப் புள்ளிமான் ஒன்று தலைநிமிர்ந்து மை தீட்டினாற்ப்ோல் ஓரங்களில் கருமை மின்னும் தன் அழகிய நீள்விழிகளால் இருவரையும் மாறிமாறிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/122&oldid=1144511" இலிருந்து மீள்விக்கப்பட்டது