பக்கம்:மணி பல்லவம் 3.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

மணிபல்லவம்


முழக்கம் எழுந்தது. அந்த முழக்கம் மேலே எழுந்து ஒலிக்கத் தொடங்கிய அதே நேரத்தில் அவருடைய கொடி கீழே விழுந்தது.

இளங்குமரன் அந்த வெற்றியின் செருக்கில் தன் மனம் கனத்துப் போகாமல் குருவை தியானித்துக் கொண்டு சுற்றிலும் ஒலித்த வாழ்த்தொலிகளைக் கேட்ப திலும் உணர்வதிலும், உதாசீனனாகி மேலே நடந்தான்.

உலகத்துப் பொருள்களின் பொதுத்தன்மை, சிறப்புத் தன்மை, கூட்டத்தன்மை ஆகியவற்றை விவரித்துக் கொண்டே வைசேடிகன் ஒருவன் இளங்குமரனுக்கு முன்னால் வந்து தன்னுடைய கொடியை நட்டான். காது செவிடுபடும் படி உரத்த குரலில் பேசினான் அவன். .

"பொருள்களிலே நீர், ஒலி, ஊறு, உருவம், சுவை ஆகிய நான்கு குணங்களை உடையது. தீ ஒலி, ஊறு, உருவம் ஆகிய மூன்று குணங்களை உடையது. காற்று, ஒலி, ஊறு ஆகிய இரண்டே குணங்களை உடையது. ஆகாயம் ஒசைக் குணம் ஒன்றே உடையது” என்று செவிகளைத் துளைக்கிறாற் போன்ற பெருங்குரலில் ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பக் கத்தினான் அந்த வைசேடிகன். -

அவனைப் பார்த்து, "இப்போது இந்தக் கணமே

ஆகாயம் தனது ஒசைக் குணத்தை இழந்து விட்டது, ஐயா!" என்று சொல்லி மெல்லச் சிரித்தான் இளங்குமரன். "ஏன் ? எப்படி இழந்தது?’ என்று வைசேடிகன் வெகுண்டு கேட்டபோது,

"ஆகாயத்தின் ஒசைக் குணம் அவ்வளவும் இப்போது உங்களுக்கே வந்துவிட்டது. இல்லாவிட்டால் இவ்வளவு பலமாகக் கத்துவீர்களா?' என்று நிதானமாகச் சொல்லிக் கூட்டத்தில் சிரிப்பலைகளை எழச் செய்தான் இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/22&oldid=1144042" இலிருந்து மீள்விக்கப்பட்டது