பக்கம்:மணி பல்லவம் 3.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

மணிபல்லவம்


"நானே உன்னை வாதுக்கு அழைக்க வரவில்லை, அழைத்துக் கொண்டு போவதற்குத்தான் வந்தேன்.”

"எங்கே அழைத்துக் கொண்டு போக வந்தீர்கள்? 'அழைத்துக் கொண்டு என்று நீங்கள் சொற்களை உச்சரித்த போது அழைத்துக் கொன்று' என்பதுபோல் அல்லவா என் செவிகளில் ஒலித்தது- கபாலிகர்கள் அசைவர்களாயிற்றே? அதனால்தான் சிந்திக்க வேண்டி யிருக்கிறது, அம்மணி.”

"இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் ஒன்று மில்லை. இந்த நகரத்திலேயே மிகவும் குறைவானவர்கள் நாங்கள்? சக்கரவாளக் கோட்டத்தில் சுடுகாட்டுக்கு அருகிலுள்ள வன்னி மரங்களின் நிழலிலேயே எங்கள் உலகம் அடங்கிப் போய்விடுகிறது. அதற்கு இப்பால் அகநகரிலும் புறநகரிலுமகாகப் பரவிக் கிடக்கும் இந்தப் பட்டினத்தின் விதவிதமான வாழ்க்கை வளங்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது.

"அகநகரிலும் புறநகரிலும் வாழ்ந்தவர்கள் தலை யெல்லாம் உங்கள் கையிலிருக்கும்போது நீங்கள் கவலைப்படுவானேன் ?”

"எதைச் சொல்கிறாய் நீ?” "இறந்தபின் இந்தப் பட்டினத்தின் மக்கள் அத்தனை பேருடைய கபாலங்களையும் நீங்கள்தானே ஆளு கிறீர்கள்?"

'இகழ்ச்சியை வளர்க்காதே, தம்பி வன்னி மன்றத்தில் எங்கள் குரு காத்துக் கொண்டிருப்பார். நீ உடனே என்னுடன் அங்கு வந்து அவரோடு வாதம் புரிய வேண்டும்.” .

"இந்த நள்ளிரவில்தான் வாதம் புரிய வேண்டுமா? நாளைக்குப் பகலில் வரலாமென்று பார்க்கிறேன். எல்லா வாதங்களும் நடைபெறும் இந்த இடத்துக்கே உங்கள் குரு வந்தாலும் நல்லதுதான். அவர் என்னைச் சந்திப்பதோடு மற்றவர்களையும் சந்தித்து வாதிடலாம்.” "அது சாத்தியமில்லை, அப்பனே! எங்கள் குரு வயது மூத்தவர்; எங்கும் வர இயலாதவர். நள்ளிரவுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/38&oldid=1144058" இலிருந்து மீள்விக்கப்பட்டது