பக்கம்:மணி மகுடம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மணிமகுடம் பொன்னழகரே! ஒரு வேண்டுகோள்! நிறைவேறுமா?.. தங்களோடு இணைந்து நின்று தாயகத்தின் மேன்மைக்குத் தொண்டாற்ற விரும்புகிறேன்... பொன்: நிச்சயமாக நிறைவேறும், தங்கள் ஆசை! எங்கள் சங்கத்தில் அங்கத்தினராகவே ஆகும் தகுதியுடையவர் தாங்கள் என்பது என் நம்பிக்கை! குள்: நானும் கூட சேரலாமா...? ெ பொன்: எங்கள் கூட இருக்கலாம். சில மாதங்களுக்குப் பிறகே, நீ அங்கத்தினராகலாம் - உன் பெயர்? குள்: அதான் - பெரிய விசேஷம்! நான் பிறந்தவுடனேயே எங்க அப்பா அம்மா செத்து விட்டார்கள்! செத்தவர்கள் எனக்குப் பெயராவது வைத்துவிட்டுப் போகக் கூடதா? அதனால் பெயரில்லா மனிதன் நான்! பொன்: உனக்கு ரோஜா மலர் மீது பிரியமாக்கும்? குள்: ஆமாம்! பொன்: நீ ஆளோ கருப்பு! உனக்குப் பிரியமோ சிகப்பு ரோஜா மீது! குள்: என்ன பண்ணுவது; கருப்பு ரோஜா கிடையாதே! புதுமை: நீதான் கருப்பு ரோஜாவாக இரேன்! உனக்கு இனிமேல் பெயரே கருப்பு ரோஜா.. பொன்: சரியான பெயர்..ம்.. போகலாமா? கருப்பு ரோஜா வா..வா! (கருப்பு ரோஜாவும், புதுமைப் பித்தனும் ஒருவரை யொருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டு பொன்னழகன் பின்னே நடக்கிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/19&oldid=1706416" இலிருந்து மீள்விக்கப்பட்டது