வைரிவ கலைஞர் மு. கருணாநிதி புது: காளி தேவிக்கு, என்னப்பா கோபம்? 13 கருப்புரோஜா: புதிய சேலை, ரவிக்கை கேட்டிருப்பாள்? கொடுத்திருக்க மாட்டார்கள். அதி: யாரடா பொடி முட்டாளே... புது: அதிகாரியாரே, ஆத்திரப்படாதீர். நீர் என்னிடம் பதில் சொல்லும் - காளிக்கும், மாரிக்கும் பூஜைகள் நடத்தி நோய்களை விரட்ட முடியுமானால், அரசாங்க சார்பிலே ஒரு வைத்திய இலாகா எதற்கு? ய அதி: அதெல்லாம் எனக்குத் தெரியாது. மணிமகுடபுரியின் கட்டளையிடுகிறார். குருநாதர் நான் கடமையை நிறைவேற்றுகிறேன். அவ்வளவுதான் - நீங்கள் எப்படியாவது கெட்டுப் போங்கள் - எனக்கென்ன வந்தது? (அதிகாரி போய்விடுகிறான்) அவன் புது: மணிமகுடபுரியின் குருநாதர் - மண்ணாங்கட்டி மக்களை மாக்களாக மதிக்கும் மண்டூகம் கட்டளையிடுகிறானாம் - பேதி தீர காளி பூஜை செய் என்று. கிழ: அய்யோ குருநாதரைத் திட்டாதீர்கள் -அவர் கடவுள் அவதாரம். புதுமை: ஆமாம் - எல்லாருமே கடவுள் அவதாரம் - அரசன் ஒரு கடவுள் அவதாரம் - அமைச்சன் ஒரு கடவுள் அவதாரம் - அரசாங்க குருநாதர் ஒரு கடவுள் அவதாரம் - எல்லோருமே அவதாரம்; சீமான்கள் சபையிலே இருக்கிற பத்து அங்கத்தினரும், தசாவதாரம் - நல்ல நாடு - நல்ல நம்பிக்கைஐயா இது. பெரியவரே சொல்லுகிறேன் என்று வருத்தப்படாதீர்கள் -கடவுள் - அவருக்குத் தரப்படும் லட்சணங்களின்படி, மிகவும் தூய்மையானவர் என்று கூறப்படுகிறது - அந்தத் தூய்மையானவர் இப்படித் துரோக அவதாரங்கள் எடுக்க மாட்டார். கிழ: அது என்னமோ தம்பி பெரியவங்க காலத்திலே இருந்து... -
பக்கம்:மணி மகுடம்.pdf/22
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை