பக்கம்:மணி மகுடம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மணிமகுடம் புது: இப்படித்தான் அடிமையாக வாழ்கிறது நமது ஏழைகள் குலம் - இதற்கு ஒரு மாறுதல் தேவையில்லையா? கிழ: விதியை மாற்ற வேண்டுமே? முடியுமா? வலிமையுடையவன் புது: விதி என்பது சட்டம்தானே - வலிமையற்றவன் மீது அதிகாரம் செலுத்த வகுத்துக் கொண்ட முறைதானே பெரியவரே விதி என்பது. பொன்: நண்பரே, இந்த விளக்கங்களைப் பிறகு வைத்துக் கொள்வோம் - பெரியவரே, நீங்கள் எல்லாம் போகலாம் -நான் நாளை காலையிலே வருகிறேன் இப்போது பேதிகண்டுள்ள பகுதிக்குப் போய், ஆக வேண்டியதைக் கவனிக்கிறேன். கிழ: சரிங்க - - (கிழவரும் மற்றவர்களும் போய் விட அங்கிருந்து சிறிது தூரம் நடந்து கொண்டே -புதுமைப் பித்தனைப் பார்த்து) பொன்: இந்த மக்கள், கடவுள், விதி, சாஸ்திர சம்பிரதாயம் இவைகளிலே கொண்டுள்ள மூட நம்பிக்கைகளை நான் எடுத்துச் சொல்வதில்லை - அவர்கள் போக்கிலேயே நானும் போய் எல்லாரையும் அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டுகிறேன். புது: அதுதான் தவறு என்கிறேன் நான். அரசனுக்கு விரோதியாக மட்டும் மக்களை ஒன்று திரட்டிப் பயனில்லை. இன்று இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பது அரசன் அல்ல - அவன் ஒரு பொம்மை எத்தனின் கையிலேயுள்ள ஏடும், மதப் பித்தனின் நெஞ்சிலே உள்ள கேடும். அதிகார வர்க்கமெனும் மணல் மேடும்தான், இந்த நாட்டை ஆட்டிப் படைக்கின்றன - இந்த ஆட்சி மக்கள் கைக்கு மாற வேண்டுமானால், மக்கள் உள்ளம் முதலில் பண்பட வேண்டும் - களவாடப்பட்ட நெல்மணிகளைத் திரும்பப் பெற்று, காய்ந்து கிடக்கும் கழனியிலே தெளித்துப் பயனில்லை - முதலில் அறிவு ஒளி - அதையொட்டித்தான் ஆட்சி ஒளி. பொன்: ஏறத்தாழ இதே கருத்துத்தான் எங்கள் அல்லிக்கும் - நான்தான் சிறிது வேறுபாடுடையவன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/23&oldid=1706420" இலிருந்து மீள்விக்கப்பட்டது