பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மண்ணியல் சிறுதேர் ஆகியவற்றில் அளவு கடந்த நம்பிக்கை கொண்டு அமைதியாயிருப்பவன் எப்படித் தலைவனாக முடியும்? வறுமையை நினைத்து நினைத்து நெஞ்சிளைப்பவன் எப்படித் தலைவனாக முடியும்? என்பது அவர்கள் கேள்வி. உண்மைதான். அவன் செல்வமாகிய பழஞ்சோற்றை நினைத்துப் புலம்பத்தான் செய்கிறான். ஆனால் அப்பழஞ்சோற்றை அவன் உண்ணமுடியவில்லை என்றா புலம்புகிறான்? பிறரை உண்பிக்க முடியவில்லையே என்றல்லவா புலம்புகிறான். தன் வீட்டில் திருடவந்த சருவிலகன் வெறுங்கையோடு சென்றிருப்பானே என்று வருந்துகிறானே, அவனை எப்படித் தலைவன் அல்லன் என்று கூறமுடியும். இன்னாசெய்தார்க்கும் இனியவற்றைச் செய்கிறான். அடைக்கலம் புகுந்தவர்களுக்குத் தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஆதரவளிக் கிறான். அவனைத் தலைவன் அல்லன் என்றால் வேறு யாரைத் தலைவன் என்பது? விதியையும் தெய்வத்தையும் நம்பினான்; உண்மைதான்... தெய்வத்திடம் ஏதாவது எதிர்பார்த்தானா? இல்லை... கடவுளை நம்பு; 5Las Logouá Q&ti (Trust in God and do the right) argårgylh கொள்கையைப் போற்றினான். ஒருவன் கடவுளை நம்பலாம்; நம்பாமலும் இருக்கலாம். ஆனால் தன் கடமையை ஒழுங்காகச் செய்து, நல்வழியைப் போற்றி வாழ்ந்தால் போதும். சாருதத்தன் அப்படி வாழ்கிறான்; தலைவன் ஆகிறான். 'தலைவன் என்றால் மாவீரனாய் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கலாம். சாருதத்தனை வீரனாகக் காட்ட வேண்டுமென்றால் ஆசிரியர் மிக எளிதாகக் காட்டிச் சென்றிருக்கலாம். "தறிமுறி” என்னும் வசந்தசேனையின் களிற்றைக் கன்னபூரகன் அடக்கினான் என்பதற்குப் பதிலாகச் சாருதத்தன் அடக்கினான் என்று கூறி