பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு I01, யிருக்கலாம்; சாருதத்தனையும் 'கடக்களிறு அடக்கிய கருணை மறவனாக'க் காட்டியிருக்கலாம். அப்படிக் காட்ட வேண்டுமென்பது ஆசிரியர் நோக்கமன்று; சாருதத்தனைத் 'தீரசாந்தனாய்க் காட்டவேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஆசிரியர். சேக்ஸ்பியர் எண்ணப்படி தலைவன் என்பவன் தொடக்கம் முதல் இறுதிவரை மேம்பாடுடையவனாய் விளங்கவேண்டும் என்றும் நாடகத்தில் வரும் ஏனைய மாந்தர்களின் நடவடிக்கைகளும் அவனைச் சுற்றியே சுழலவேண்டும் என்றும் ஒர் அறிஞர் குறிப்பிடுவது:இங்கு கவனிக்கத்தக்கது. சாருதத்தனைச் சார்ந்தே பிற நாடக மாந்தர்கள் விளங்குகிறார்கள் என்பதை மண்ணியல் சிறு தேரைப் பயில்வார் எளிதில் கண்டு கொள்ளலாம். சாருதத்தனைச் சார்ந்ததால் வசந்தசேனை “வது' என்னும் தகுதியைப் பெறுகிறாள். ஆரியகன் உச்சயினியை ஆளும் பேறுபெறுகிறான். சம்ாைககன் பெளத்த மடங்களுக்குத் தலைவன் ஆகும் பெருமை அடைகிறான். சந்தனகன் படைத் தளபதி ஆகும் பீடு பெறுகிறான். எனவே சாருதத்தன் தலைவன் என்பதில் ஐயப்பட வேண்டிய தில்லை. சாருதத்தன் மனிதன் என்பதால் அவனிடத்திலும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். தனக்கு மரண தண்டனையளித்த பாலகனை நரகத்தில் வீழுமாறு சபிப்பதும், அவன் மடிந்த செய்தியைச் சருவிலகன் கூறக்கேட்டு மகிழ்வதும் சாருதத்தன் பால் உள்ள

  • "Ahero is a person who should play his part predominantly from the beginning to the end and activities of all other characters must

rotate round him." - Harrison.