பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு f{33 புதிய தாமரை மலர் போன்ற கை யழகி, அன்ன நடையழகி; வண்டுகள் மொய்க்கும் வாசமலர் நிறைந்த தலையழகி, ஆம். அவள் உச்சயினி நகரத்தின் தலையழகி! அவள் எல்லாக் கலைகளையும் உணர்ந்திருக்கிறாள். (V) எனினும் வாழ்க்கைக் கலையைச்சாருதத்தனிடம் பயில விரும்புகிறாள். சாருதத்தன் இதயமேடையில், தன் ஆனந்த நடனத்தை அரங்கேற்றும் நாள் எந்நாளோ என்று காத்துக் கொண்டிருக்கிறாள், அக்கலையரசி, அவளைப் பரத்தை, வேசி, தாசி என்றும் காசினைப் பறிக்கும் காமன் கைக்கசை' என்றும் சகாரன் பழித்துரைக்கிறான். பரத்தையர் குலத்தில் பிறந்ததுதான் வசந்த சேனை செய்த பெரிய பாவம்! அவள் மனமோ அக்குல ஒழுக்கத்தைக் கண்டு கூசுகிறது; நாணுகிறது! தொடக்கத்தில் சகாரனோடு சேர்ந்து விடனும் அவளைப் புரிந்துகொள்ளாமல் கணிகையாம் நீ நல்வழியிடைத் தோன்றிக் காணு பூங்கொடியினை ஒப்பாய்' என்கிறான். அவள் பூங்கொடிதான். ஆனால் விடன் கூறுவதைப் போல எல்லார்க்கும் உரிமையாகும் பூங்கொடியா? இல்லை; ஒருவனுக்கே தன் இன்ப மலரை அளிக்கக் காத்திருக்கும் பூங்கொடி. இதை விடனே பின்னால் உணர்ந்துகொண்டு வசந்தசேனையைப் பாராட்டுகிறான்; 'இந்நகர்க் கணியாய் இளையளாய்க் கணிகை யெனினுமக் குலத்தினுக் கொவ்வா நன்னர்வான் குணங்கள் அமைதரப் பெற்ற நவையறும் உண்மையன் பினளாம்" என்கிறான். காமதேவாயதனம் என்னும் பூஞ்சோலையில் சாருதத்தனைக் கண்டது முதல் வசந்தசேனை அவனிடத் திலேயே உண்மையன்பும் விலையிலா உறுதியன்பும்' கொள்கிறாள்