பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மண்ணியல் சிறுதேர் அவள் பொன்னுக்கோ பொருளுக்கோ சாருதத்தனைக் காதலிக்கவில்லை. உண்மையில் அவள் பொன்னையும் பொருளையும் மதிக்கவுமில்லை. பதினாயிரம் பொன் னோடு வந்த சகாரன் வண்டியில் ஏறுகிறாளா? இல்லை. ஏறுமாறு பணித்த தாயுரையை ஏற்கிறாளா? இல்லை. ஏற மறுக்கிறாள். சினக்கிறாள். அவள் எட்டுக் கட்டுக்களாக அமைந்த இல்லத்திற்குரியவளாயிருந்தும் எள்ளளவும் செருக்கின்றியிருக்கின்றாள். வேறொருத்தியாயிருந்தால் தினமும் தன்னிடமுள்ள பொற்காசுகளை எண்ணிப் பார்ப்பாள். அவளோ, செல்வம் தாமரையிலைக்கண் வீழ்ந்த நீர்த்திவலைகளைப்போல் நிலையில்லாதது (IV) என்று எண்ணிப் பார்க்கிறாள். எத்துணை ஞான உள்ளம்! இதனால்தான் ஏனைய கணிகையரைப்போல் வசந்த சேனை யாரையும் போற்றக் கருதவில்லை'; ஒருவனை மணந்து அவனிடம் இன்பம் எய்த விரும்புகிறாள். (II) தான் பொருட்செல்வத்தைப் போற்றுபவள் அல்லள் என்றும் சாருதத்தன் தனக்குப் பரிசில் தரவேண்டியதில்லை யென்றும் காட்டவே அணிகலனை அவனிடம் அடைக்கலமாக்குகிறாள். கள்வனாற் கவரப்பட்ட அணிகலனுக்காகச் சாருதத்தன் கொடுத்தனுப்பிய இரத்தினமாலையை வேறொருத்தியாயிருந்தால் பேசாமல் வாங்கி வைத்துக்கொள்வாள். அவளோ, 'இவ் இரத்தினமாலையால் இவளை (தன்னை) நிறுத்துணர எண்ணியது தக்கதன்று' என்கிறாள். துதையிடம் அதைத் திரும்பச் சேர்க்க முனைகிறாள். எத்துணை தூய உள்ளம் 'குணமன்றே காதற்குக் காரணம்'(1) என்று கருதும் அவள் சாருதத்தனின் குணத்திற்கே அடிமையாகிறாள். பணிப்பெண் ஆகிறாள். (111) மெல்ல மெல்லச் சாருதத்தன் இல்லத்திலும் அவனைச் சார்ந்தோரின் உள்ளத்