பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 105 திலும் நுழைகிறாள். நாடகத்தின் இறுதியில் ஆரியகன் 'வது என்னும் தகுதியை வசந்தசேனைக்கு அளிக்கிறானே, அதுகூடப் பெரிதில்லை; தூதையால் உடன் பிறந்தாள் என்று அழைக்கப்படுகிறாளே அதுதான் பெரிது! தூதைக்குத் தங்கை ஆகும் வசந்தசேனை உரோக சேனனுக்குத் தாயும் ஆகிறாள். உரோகசேனனுக்காகக் கண்ணிர் வடிக்கிறாள். தன் கலன்களைக் கழற்றிக் கொடுத்துப் பொன்வண்டி செய்துகொள்ளுமாறு அவனை வேண்டுகிறாள். எத்துணை அன்புள்ளம்| சாருதத்தனிடம் வசந்தசேனை கொள்ளும் காதல் நிலத்தைக் காட்டிலும் பெருமை வாய்ந்தது; வானைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் ஆழமானது. "வறுமைமிக்க சாருதத்தனைக் கூடுதற்குச் செல்லு கின்றாய்' என்று சகாரன் கூறக்கேட்டு 'இச்சொல்லால் யான் அலங்கரிக்கப்பட்டுள்ளேன்' என்கிறாள்; மகிழ் கிறாள். ஆனால் 'இவள் தங்களைக் கூடுதற்கு வந்திருக் கின்றாள்' என்று விடன் சகாரனிடம் கூறும்போது "தீவினை ஒழிக தீவினை ஒழிக’’ என்று துடிதுடிக்கிறாள்! எவ்வளவு முயன்றும் சகாரனால் வசந்தசேனையின் உள்ளத்தில் இடம்பெற முடியவில்லை. அவள் காலைக் கையாற் பிடிக்கிறான். எனினும் வெல்ல முடியவில்லை. காலைக் கையாற் பிடிக்க முடியுமா? தோல்வி ய்டைகிறான். கற்பென்னும் திண்மையுள்ள வசந்தசேனை தன் உயிர்ப் பயணம் முடியும் நேரத்திலும் 'மாட்சிமிக்க சாருதத்தருக்கு வணக்கம்' என்கிறாள். எத்துணைக் காதல் உள்ளம்! ஒருநாள், வசந்தசேனை சூதர்களால் துரத்தப்பட்ட சம்வாககனுக்கு அடைக்கலம் அளிக்கிறாள்; தன் வளையலைக் கொடுத்துக் காப்பாற்றுகிறாள். இன்னொரு