பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு I07 அரசன் மைத்துனன் என்பதுதான் அப்பட்டம் ஒன்றை வைத்துக்கொண்டுதான் ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிறான். 'அரசனுடைய மாமன் என் தந்தை; அரசன் என் தந்தையின் மாப்பிள்ளை; என்தங்கையின்கணவன் அரசன்; அரசன் என்னுடையமைத்துனன்(IX) என்று நீதிமன்றத்தில் அரசனுக்கும் அவனுக்குமுள்ள ஒரே உறவுமுறையை நான்கு சம்பந்தம் உடையதாய்க் (நான்கு பேர் மதிக்க வேண்டும் என்றோ என்னவோ) கூறுகிறான், அஞ்ஞான சம்பந்தம்! வயிறு வெடிக்கத் தின்பதும், வீதிதோறும் வெறி நாயைப்போல் சுற்றித் திரிவதும் சகாரனுடைய நித்திய கருமங்கள் அரசன் மைத்துனன் என்ப்தால் நகரக் காவல தலைவன் ஆகிறான்; அதாவது வேலி ஆகிறான். அவன் அப்பொறுப்பை ஏற்ற பிறகுதான், தெருவில் செல்லுட வசந்தசேனையைத் துரத்திச் செல்கிறான்; அதாவது பயிரை மேயும் வேலி ஆகிறான். இராமாயண மாபாரதக் கதைகள் எல்லாம் சகாரனுக்குத் தலைகீழ் பாடம் வசந்த சேனையைப் பின்தொடரும் போது அவன் தன் இதிகாச ஞானத்தைக் கூடியமட்டிலும் வெளிப்படுத்துகிறான். 'இராவணன் கையில் குந்தி எப்படி அகப்பட்டாளோ அப்படி நீ என் கையில் அகப்பட்டாய்” (I) என்கிறான். இராவணன் கையில் ஒரு பெண் அகப்பட்டதை அவன் கேட்டிருக்கக்கூடும். அவளைத் தன் இராமாயணத்தில் குந்தியாக்கிக் கொள்கிறான். சுபத்திரையை அனுமான் கவர்ந்தானாம்; பாவம் அனுமான் குந்தி மகன் தசமுகனாம்! சமதக்கினி மகன் வீமனாம்! சாணக்கியன் திரெளபதியின் கூந்தலைப் பற்றி இழுத்தானாம் ஒரே வேடிக்கை