பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கே பூம்புகார் நகரத்துக் குடிகாரர்களைப் பற்றி ஒட்டக்கூத்தன் பாடிய பாட்டொன்றைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமே! எவ்வளவுதான் குடித்தாலும் பூம்புகார்க் குடிகாரர்கள் சோர்வடையமாட்டார்களாம். எதைக் கேட்டாலும் தெளிவாகச் சொல்லுவார்களாம். ஒருவன், மாபாரதக் கதையைச் சொல்லவா என்று கேட்கிறான். 'சரி, சொல்' என்றால் 'உள்ளபடி சொல்லவா என்கிறான். “சரி உள்ளபடி சொல்' என்றால் 'வாலி துரோபதையை மூக்கரிந்தது அல்லவா மாபாரதம்' என்கிறான் சகாரன் கதையும் அந்தக் கதைதான்." பூம்புகார்க்காரனாவது அரைப்படி, ஒருபடி என்று குடித்துவிட்டு உள்ளபடி சொல்கிறான். சகாரனோ அப்படி ஒன்றும் குடிக்கவுமில்லை; பின்னர் எப்படி 'பீடுறும் இராமற்கு அஞ்சி ஒடும் சீலத் திரெளபதி போலச் செல்லல் ஏன்' என்று கேட்கிறான்? இப்படிச் சகாரன் வாயில் வராத விருத்தம் (குற்றம்) இல்லை; அவன் பேச்சில் ஒன்றும் பொருத்தம் இல்லை; அதைப்பற்றி அவனுக்குக் கடுகளவும் வருத்தம் இல்லை. எருதுகள் அறுந்து போகவில்லையா, களிறுகள் இறந்து போகவில்லையா, என்று யாரேனும் கேட்பார்களா? சகாரன் கேட்கிறான் (Xill). மாலை மணத்தைக் கேட்கவும் அணிகலன் ஒசையைப் பார்க்கவும்கூட அவனால்தான் முடியும். (1) பொருளுடையீர், புண்ணியமுடையீர் (XIII) t புள் இருக்கும் தார்மார்பன் பூம்புகார் வாழ்களியேம் கள் இருக்கும் கள்ளை உண்டு சோர்விலேம் உள்ளபடி சொல்லவா? வாலிதுரோபதையை மூக்கரிந்த(து) அல்லவா மாபாரதம் - ஒட்டக்கூத்தன்-தனிப்பாடல்