பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு II3 தெரிகிறது. வசந்தசேனையின் கழுத்தை நெரித்து வீழ்த்திய பிறகு 'மாதிவளைக் கொன்றனன்; என் கைத்திறனை எவ்வாறு வருணிப்பேன் யான் (VIII) என்று சகாரன் கூறுகிறான். நாம் அஞ்சுகிறோம். சாருதத்தன் கொலைக் களத்திற்கு அழைத்து வரப்படுவதைக் கண்டு 'பகைவனது மரணமோ என் உள்ளத்திற்கு மிகப்பெரு மகிழ்ச்சியாகும்" (X) என்று தன் பராக்கிரமத்தைப் பாராட்டிக் கொள்ளும் போதும், "சாருதத்தனை அவன் மகனோடு கூடக்கொன்று விடுங்கள் (X) என்று சண்டாளர்களிடம் சொல்லும் போதும் இவ்வளவு கொடியவனா இவன் என்று அஞ்சுகிறோம். 'எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து' என்னும் குறளை சகாரனுக்காகவே வள்ளுவர் எழுதினாரோ என்னவோ? 'குறளை பேசுபவனும் கொடியவனுமாகிய (IX) சகாரன் தனக்கு ஏதேனும் துன்பம் வருமானால் தாங்கமாட்டான். மானத்தை விட்டுப் பகைவன் காலில் விழவும் தயங்கமாட்டான். நூறு பெண்களாயினும் கொன்றுவிடும், இச்சூரன் மனிதர்கள் என்றால் மட்டும் அஞ்சுகிறான்: (1). எவ்வளவு பெரிய வீரன்! விடன் சகாரனின் கழுத்தைப் பிடிக்கும்போது "ஐயன் பெருமானைக் (தன்னை) கொல்லுகிறான்' என்று கதறுகிறான் சகாரன், எவனை - எந்த வாயால் கருப்பதாசீ புத்திரன்' என்றும் "வறுமைமிக்க சாருதத்தன்' என்றும் பழித்தானோ, அவனை-அதே வாயால்-'மாட்சிமிக்க சாருதத்தன்' என்று புகழ்கிறான். அவன் பாதங்களில் வீழ்ந்து காக்குமாறு கெஞ்சுகிறான். ஆம்... சகாரன் ஒரு கோழைதான்... மான உணர்ச்சியற்றவன்தான்.