பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 115 அவனை 'புரச மரம்’ என்கிறாள். விடன் ஊன் மரம்' என்கிறான். நீதிபதி 'முள் மரம்' என்கிறார். நீதிபதியின் தீர்ப்பை நாம் ஏற்கலாமல்லவா? IV மைத்திரேயன் 'விதூடகன் என்பவன் தன் ஊனமான உடலாலும் பேதைமையான 'பேச்சாலும் அலங்கோலமான தோற்றத்தாலும் சிரிப்பை உண்டாக்கும் வேடிக்கைக் கலைஞனாய் விளங்கவேண்டும் என்பது விதி. மண்ணியல் சிறுதேரில் வரும் மைத்திரேயன் என்னும் விதுரடகன் இவ்விதிக்கு விலக்கல்ல. 'காக்கைக் கால் போன்ற தலையுடையவன் (I) என்று சகாரனால் வருணிக்கப்படுகிறான். 'ஒட்டகக் கன்றின் முழங்கால் போன்ற தலையை உடையவன்' என்று மைத்திரேயனே தன் தலையைப் பற்றிக் கூறிக் கொள்கிறான். வடமொழி நாடகங்களில் வரும் ஏனைய விதூடகனைப் போலவே மைத்திரேயனும் வாய்ச்சுவையில் நாட்ட முள்ளவனாக விளங்குகிறான். சாருதத்தன் இல்லத்தில் ஒரு காலத்தில் கொழுக்கட்டைகளை உண்டு மகிழ்ந்ததை நினைவுகூரும்போதும், வசந்தசேனையின் இல்லத்தில் தயாரிக்கப்படும் உணவு வகைகளைக்கண்டு"இப்பொழுது

  • The Vidusaka is a Jester who creates laughter by means of his deformed limbs, absurd speech and ugly dress.

- See J.T. Parikh's The Vidusaka: Theory and Practice. P.21.