பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HH6 மண்ணியல் சிறுதேர் இவ்விடத்தில் செவ்விதின் ஆக்கப்பட்ட உணவை உண்ணுக என்று கூறப்பெறுவேனா?” என்னும் போதும் அவனுடைய வாயுணர்வை அறிந்து கொள்கிறோம். ஏனைய விதூடர்களைப் போலவே மைத்திரேயனும் நாடகத் தொடக்கத்திலிருந்து தன் நகைச்சுவையை வெளிப் படுத்துகிறான். அவன் சகாரனோடு உரையாடும்போதும் (1)கும்பிலகன் கேட்கும் கேள்விகளுக்கு விடை கூறும் போதும் (V) நாம் நகைக்கிறோம். வசந்தசேனை அணிகலன்களைச் சாருதத்தனிடம் அடைக்கலமாக்கும் போது "உனக்கு மங்கலம் உண்டாகுக' என்கிற்ான். ஆ மூட அடைக்கலப் பொருளன்றே ஈது' என்று சாருதத்தன் கூறியவுடன் "அங்ங்னமாயின் கள்வராற் கவரப்படுக (1) என்கிறான். அப்பொருளைக் கவர்ந்து சென்ற கள்வன் உண்டாக்கிய கன்னத்துளையை 'இரண்டாவது வாயில் வழி'(iii) என்கிறான். வசந்தசேனையின் தாயின் பருத்த தோற்றத்தைக் காணும்போது "பெரிய தெய்வ உருவத்தைப் போன்ற இவளை முதலில் உள்ளே புகுத்திப் பின்னர் இவ்வீட்டின் வாயில் வழி நிருமிக்கப்பட்டது கொல்?" என்கிறான். இக்காட்சிகளில் எல்லாம் நம்மைச் சிரிக்க வைக்கிறான்; சிந்தையைக் கவர்கிறான். ஏனைய விதுாடகர்களைப்போலவே மைத்திரேயனும் ஒர் அந்தணன். நாடகத் தலைவர்களுக்கு அறிவு கொளுத்தி நல்வழிப்படுத்தும் தகுதி அந்தணர்களுக்கேயுரியது என்ற நம்பிக்கை வலுவாயிருந்த காலத்தில் இயற்றப்பட்ட வடமொழி நாடகங்களில் விதூடகர்கள் எல்லாரும் அந்தணர்களாகப் படைக்கப்பட்டுள்ளார்கள் எனினும் அவர்கள் தங்கள் பிறப்பொழுக்கத்தைச் செம்மையாகக் கடைப்பிடிக்காததால் அவர்களைப் பெயரளவில்