பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H18 மண்ணியல் சிறுதேர் வணங்கி நித்திய கன்மத்தைக் கடைப்பிடிக்கவோ அவனால் முடியாது. அதனால்தான் அவன் 'மகாப் பிராமணன்' எனப்படுகிறான்! பெரும்பாலும் வடமொழி நாடகங்களில் வரும் தலைவன் அரசனாயிருப்பான். அவனுடைய அந்தப்புரம் வரை போய்வரும் உரிமை விதுாடகர்களுக்கு அளிக்கப் பட்டிருந்தது. எனவே, தலைவனின் அகவாழ்வில் அதிகப் பங்கெடுத்துக் கொள்ளும் விதுரடகனைக் காதல் துறையின் spoološāoš (a minister with the portfolio of love) grain அழைத்தார்கள். நம்முடைய நாடகத் தலைவன் ஓர் அந்தணன்; எனினும் அவன் பின்னால் அரசனாகப் போகிறான். மற்ற அமைச்சர்கள் எல்லாம் பின்னால்தான் வருவார்கள் போலும். ஆனால் காதல் துறையின் அமைச்சனான மைத்திரேயன் மட்டும் நாடகத் தொடக்கத் திலேயே வருகிறான். வசந்தசேனை, சாருதத்தனிடம் காதல் கொண்டிருப்பதை மைத்திரேயன்தான் முதலில் சாருதத்தனிடம் வெளிப்படையாகத் தெரியப்படுத்து கிறான். காதலர் இருவரும் சந்திக்கும்போது இன்ப வளர்ச்சிக்கு ஏற்ற வினாக்களைக் கேட்கிறான். எனவே தான் அவனை நிபுணன் என்று வசந்தசேனை பாராட்டு கிறாள். சாருதத்தன் உள்ளத்தில் சின்னக் கவலைகள் மோதும்போதெல்லாம் அவற்றைத் தடுத்துச் சாருதத்தன் காதலில் மூழ்க உதவுகிறான் மைத்திரேயன். சருவிலகன் திருடிய அணிகலன்கள் வசந்த சேனையிடம் சேர்ந்த செய்தியைச் செப்பிய சேடிக்குப் பரிசளிக்க இயலாதது குறித்து வாடியிருக்கிறான் சாருதத்தன். பக்கத்தில் வசந்தசேனையிருக்கிறாள்; காதல் அமுதை அருந்திக் களிக்காமல் சாருதத்தன் பொழுதை வருந்திக் கழிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. இந்த வறட்சியான