பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தினமாலையை வசந்தசேனை ஏற்றுக்கொண்டதை வைத்து அவள் பொருட்பற்றுள்ளவள் என்று மைத்தி ரேயன் கருதுகிறான். உடனே தன் நண்பனை நல்வழிப் படுத்தும் விதத்தில் 'ஓ நண்பரீர் பொருட்பெண்டிர், யானை, கணக்கன், கீழ்மகன், கழுதை இவர்கள் உள்ள இடங்களிற் கொடியவர்களும் வாழ்க்கை பெற மாட்டார்கள்' என்று நேரடியாக இடித்துரைக்கிறான். வசந்த சேனையை நல்லவள் என்று பின்னால் அறிந்து கொள்ளும்போது அவன் அவளை மதிக்கிறான். சாகுந்தல நாடகத்தில் வரும் விதூடகன், ஏதோ மரபை ஒட்டிப் படைக்கப்பட்ட பாத்திரமாக விளங்கிறானே தவிர அவனுக்குக் கதை நிகழ்ச்சிகளில் அதிக வேலையில்லை." நம்முடைய மைத்திரேயனோ நாடகத் தொடக்கம் முதல் இறுதிவரை வருவதோடு கதை இயக்கத்திற்கு இன்றிய மையாத ஒரு பாத்திரமாகவும் திகழ்கிறான். வழக்கு மன்றத்தில் சாருதத்தன், குற்றம் சாட்டப்பட்டு நிற்கும் போது மைத்திரேயனை ஆவலோடு எதிர்பார்க்கிறான்; அவன் வசந்தசேனையிடம் அணிகலனைக் கொடுத்து வருவான், மன்றத்தில் வசந்த சேனையைப் பற்றிக் கூறுவான் என்று எதிர்பார்க்கிறான். அவன் எதிர்பார்த்ததைப் போலவே மைத்திரேயன் வருகிறான். ஆனால் தன்னையுமறியாமல் சாருதத்தனுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுக்க வருகிறான். சகாரனோடு

  • ... ஆகவே, உலாவிச் செல்லும் வலியனான ஒரு கட்டிளைஞன்

விளையாட்டாக ஒரு கோல் கைக்கொண்டு செல்வதல்லது அதனைத் தனக்கோர் ஊன்றுகோலாகக் கொள்ளாமைபோல, இந்நாடகக்கதை நிகழ்ச்சியும் இவனை (விதூடகனை) ஒரு விளையாட்டுக் கருவியாக இடையிடையே ஈர்த்துச் செல்வதன்றிப் பிறிதிலாமை காண்க. - மறைமலையடிகள், சாகுந்தல நாடக ஆராய்ச்சி, ப.91.