பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 125 எண்ணுகிறான் சாருதத்தன். அவன் எண்ணியவாறே, ஆரியகன் நாடகத்தின் இறுதியில் உச்சயினி நகரத்தின் அரசன் ஆகிறான். சித்தபுருடன் கட்டளையால் ஆரியகனை இடைச்சேரி யினின்றும் கொணர்ந்து பாலகன் சிறைப்படுத்துகிறான். கொலைப்படுத்த முயல்கிறான். பின்னர் சருவிலகன், சாருதத்தன் ஆகியோரின் உதவியால் தப்பிச்செல்கிறான். இறுதியில் சருவிலகன், ஆரியகனை அரசனாக்குகிறான். இந்நாடகத்தில் ஆரியகனின் பங்கு இவ்வளவே. உண்மையில், சோதிடமும்பாலகனின் அச்சமும்தான் ஆரியகனை அரசனாக்குகின்றன. இல்லாவிட்டால் அவன் பேசாமல் இடைச்சேரியில் இருப்பான். பாலகனுடைய கொடுங்கோன்மையை எதிர்க்கும் புரட்சித் தலைவனாக ஆரியகன் விளங்குகிறானா? மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்குகிறானா? இல்லை. புரட்சிக்கவிஞரின் உதாரன் 'சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறியகதை, நமக்கெல்லாம் உயிரின் வாதை' என்கிறானே, அப்படிப் பேசி மனத்தைக் கவர்கிறானா? இல்லை. மாறாக, 'நாடு மியல்பினன் அரசன், வலியவனோடு உறுபகைமை நமக்கென்னம்மா' என்கிறான். எனவே ஆரியகனைப் புரட்சித் தலைவன் என்று சொல்வதற்கில்லை. சித்தபுருடன் வாக்கை நம்பி அரசனுக்கு எதிரான கூட்டம் ஒன்று இவனைப் பின்பற்ற ஆரம்பிக்கிறது. அவ்வளவுதான்; ஆரியகன் அரசன் ஆகிறான்.