பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மண்ணியல் சிறுதேர் அந்தக் காலத்தில் அரசியல் மாற்றங்கள் எல்லாம் அன்றாட நிகழ்ச்சிகளாக இருந்தன. அந்தக் காலத்தில் அரச பதவியை அடைவது அரிதல்ல; இந்தக் காலத்தில் புகை வண்டியின் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் வலியவன் ஒருவன் ஓங்கிப் பேசி இடம்பிடித்துக் கொள்வது எவ்வளவு எளிதோ, அவ்வளவு எளிது.” எனவே, ஆரியகன் அரசன் ஆனதில் வியப்பில்லை. அரசன் ஆனபிறகு ஆரியகன், முதலாவதாகச் சாருதத்தனைத் தக்க சமயத்தில் காப்பாற்றுகிறான். அவன் அருட்குணத்தால்' உச்சயினியின் அரசன் ஆனதாகக் கூறுகிறான். சாருதத்தனைக் குசாவதியின் அரசனாக்கு கிறான். வசந்தசேனைக்கு வது: என்னும் தகுதியை வழங்குகிறான். . ஆம். ஆரியகன் நல்லவன்; நன்றி மறவாதவன்! VII சருவிலகன் தலைமைக் கதையிலும் சார்புக் கதையிலும் வரும் ஒரே பாத்திரம் சருவிலகன்தான். நான்கு மறைகளையும் நன்கு கற்ற ஒரந்தணனின் மகனான அவன் மதனிகையின்

  • Political revolutions, however, seem to have been such simple affairs in those days as to occur any and every day. It was as easy perhaps to occupy a throne in those days as it is for any bully in these days to occupy a seat in a third-class railway compartment.

- R.V. Jagirdar, Drama in Skt. Lit. P.101.