பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 127 கண்களில் காதலைக் கற்கிறான். அவளை அடிமை யினின்று மீட்டுத் தன் இல்லத்தின் அரசியாக்கக் களவு நூல்களைக் கற்கிறான்; 'கற்றபடி நிற்க கருதிச் சாருதத்தன் இல்லத்தில் கன்னம் வைக்கிறான். சருவிலகன் களவுத்தொழிலில் தேர்ச்சிமிக்கவன். தாமரைமொட்டுப் போலவும் இளமதியம் போலவும் நிறைகுடம் போலவும் விசித்திர விசித்திரமாய்க் கன்னம் வைப்பதில் வல்லவன். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். சருவிலகனோ, பூணுலைத் தன் தொழிலுக் குரிய ஆயுதமாகப் பயன்படுத்துகிறான். 'இம்முப்புரி நூலோ, பொதுவாக அந்தணர்களுக்குச் சிறந்த பெரிய உபகாரப்பொருளாகும்; என் போன்றார்க்கோ மிகச் சிறந்த உபகரணமாகும் ' என்று கூறிக் கன்னத்துளையைப் பூணுரலால் அளக்கிறான். கன்னத்துளையுண்டாக்கும் உபாயங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறான். சாருதத்தன் வீட்டில் கன்னத்துளை வழியாய் முதலில் பொம்மையைச் செலுத்துவதும், செல்வம் இருக்கிறதா இல்லையா என்று அறிய வித்துக்களை இறைத்துப் பார்ப்பதும், தற்காப்புக்காகக் கதவைத் திறந்து வைப்பதும், பிறருடைய கண்படாமலும் புண்படாமலும் இருக்கப் பச்சிலையை மேனியில் பூசுவதும், தீவீழ் விட்டிலைத் திறந்துவிட்டு விளக்கை அணைப்பதும் ஆகிய நடவடிக் கைகளில் அவன் ஈடுபடும்போது அவனுடைய தொழிற் பயிற்சியைக் கண்டு வியக்கிறோம். சாருதத்தனும், சருவிவகன் உண்டாக்கிய கன்னத்துளையைக் கண்டு 'ஆ' ஆ! இக்கன்னத்துளை அழகாக இருக்கின்றது' என்று வியந்து பாராட்டுகிறான். கொலையினும் களவு குறைந்த குற்றமுடையது என்றும் ஒருவனுடைய கால் பிடித்துக் கைபிடித்து வாழ்வதைக்