பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 129 காதலியோடு புதிய வாழ்வு தொடங்கும் நேரத்தில் ஆரியகன் சிறைப்பட்ட செய்தியை அறிகிறான். அப்போதே 'அன்பினால் இயைந்த நண்பனே பெண்பலர் தம்மினும் பெரியன்' என்று புறப்படுகிறான். சருவிலகன் பார்வையில் காதலைக் காட்டிலும் நட்பு ஒரு படி உயர்ந்ததாகத் தென்படுகிறது. - ஆரியகன் அரசன் ஆவதற்கும் உச்சியினி புதிய பொலிவு பெறுவதற்கும் சருவிலக்ன்தான் காரணம். 'கொடிய பாலகனைக் கொன்று குறைவிலாரியகற் காங்கே முடி புனைந்தரசை யீந்தேன்' (X) என்று அவனே கூறுகிறான். கொலைக்களப்படவிருக்கும் சாருதத்தனையும் காப்பாற்று கிறான்; அவன் விருப்பங்களை நிறைவேற்றுகிறான். சருவிலகன் புதிய அரசில் பீடும் பெருமையும் பெறுகிறான்; நம் இதயத்திலும் இடம்பெறுகிறான். VII மதனிகை 'பெண்புத்தி பின் புத்தி என்பார்கள். மதணிகை பெண்தான்; ஆனால் பின்புத்தி இல்லாதவள். எதையும் முன்னதாகவே, நுட்பமாகவே ஆராயும் மதியுள்ளவள். சிலபெண்களுக்கு முகம் மட்டும் மதியாயிருக்கும். தலை ‘நிம்மதியாயிருக்கும். மதனிகைக்கோ முகத்திலும் மதி இருக்கிறது. தலையிலும் மதியிருக்கிறது. ஆதலால் அவள் மதிக்கத்தக்கவள். வசந்தசேனை நீராடாமல் தெய்வங்களுக்குப் பூசை நிகழ்த்தாமல் இருப்பதைக் கண்டு அவளிடம் "ஒராடவன் பால் விருப்பம் வைத்திருக்கிறீர்கள் என்கிறாள். அவள்