பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மண்ணியல் சிறுதேர் சூதன் ஆகிறான். வசந்தசேனையைச் சந்தித்த பிறகு துறவி ஆகிறான். பத்துப் பொற்காசின் நிமித்தம் சூதுகளத் தலைவனால் துரத்தப்பட்டு, வசந்தசேனையிடம் அடைக்கலம் புகுந்து, சாருதத்தனின் பெயரைச் சொல்லிப் பெருமதிப்புப் பெறுகிறான். வசந்தசேனை, தன் பிணையைத் தீர்த்த பிறகு சூதில் வெறுப்புற்று அவளிடம் சூளுரைத்துத் துறவியாகிறான். புட்பகரண்டகத்தில், சம்வாககனை, ஐந்து புலன் களையும் அடக்கிய துறவியாகச் சந்திக்கிறோம். “என்னுடைய இத்துறவறம் மிகவும் தூய்மை வாய்ந்தது' (VIII) என்கிறான். 'அறிவில்லாதவர்களே! அறத்தைக் கடைப்பிடித்துச் செய்ம்மின்கள்' என்றும். "உள்ளம் மழியார் உவந்து தலைமழித்தும் எள்ளும் முகமழித்தும் என்பயனோ?' (VIII) என்றும் ஞானப் பண்ணிசைக்கிறான். பின்னர், சகாரனால் துன்புறுத்தப்பட்டுக் கிடக்கும் வசந்தசேனையைக் காப்பாற்றுகிறான்; கைம்மாறு செய்கிறான். வசந்த சேனையை அழைத்துச் சென்று கொலைக்களத்தில் நிற்கும் சாருதத்தனையும் காப்பாற்றுகிறான். தான் ஒரு துறவி என்பதைக் கூட மறந்து சாருதத்தனின் பாதங்களில் வீழ்கிறான். இறுதியில் தன் துறவின் திட்பத்தைப் புலப்படுத்திப் பெளத்த மடங்களுக்கெல்லாம் தலைவன் ஆகிறான். காதலர் வாழ்வைச் சிதைக்கும் கொடுமுயற்சிக்கு ஒரு துறவியைப் படைத்துள்ளான் காளிதாசன். தூய காதலரை ஒன்றுகூட்டுந் தொண்டுக்கு ஒரு தூய துறவியைச் சம்வாககனைப் படைத்துள்ளார் சூத்திரகன். i. மறைமலையடிகள், சாகுந்தல நாடக ஆராய்ச்சி. ப. 96.