பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - I33 மற்றும் பலர்... சாருதத்தன் முதல் சம்வாககன் வரையுள்ள மாந்தர்கள் மட்டுமல்லாமல் மற்றும் பலர் மண்ணியல் சிறுதேரின் வெற்றிக்குத் துணை நிற்கிறார்கள். "ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மன்னக்கு வயிறும் உடையவன் என்று துரியோதனனால் பழிக்கப்படும் விதுரனைப்போலவே இந்நாடகத்தில் வரும் சகாரனின் விடன் விளங்குவதையும் முதலில் பொருள் மயக்கங்கொண்ட வசந்தசேனையின் தாய் வழக்கு மன்றத்தில் தான் வசந்தசேனையின் தாய் தான் என்று மெய்ப்பிப்பதையும் நாடக ஆசிரியர்நயம்படக் காட்டுகிறார். கொடுங்கோலனை நம் கண்ணுக்கு முன்னர் காட்டக்கூடாது என்றோ என்னவோ இறுதிவரை பாலகனைக் காட்டாமலே செல்கிறார். மேலும், இரதணிகை, வசந்தசேனையின் சேடன், படைத் தலைவர்கள் சந்தனகன், வீரகன், நீதிபதி போன்ற சிறு பங்குபெறும் நாடக உறுப்பினர்களையும் (Minor Characters) தனித்தன்மையோடும் கவனத்தோடும் படைத்துள்ள சூத்திரகனின் திறனை அறிஞர் பாஷாம் போன்றோர் குறிப்பிட்டுப் பாராட்டுவதைக் காட்டிலும் நாம் என்ன பாராட்ட முடியும்? f பாரதி, பாஞ்சாலி சபதம்.

  • It (Mrcchakatika) is not able for its realistic depiction of city

life, and for its host of minor characters, all of whom are drawn with skill and individuality." - A.L. Basham, The wonder that was India. P. 441.