பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சூத்திரகன் - ஒரு பேரறிவாளர் சில நாட்களுக்கு முன்பு சீன வரலாற்று நூல் ஒன்றை விரித்தபோது சீனநாட்டில், மஞ்சுப் பேரரசர்கள் ஆண்ட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்கள்-அளவில் பெரிய நாடகங்கள்-தோன்றின என்னும் ஒரு குறிப்பைக் கண்டு வியந்தேன்; அவற்றுள் ஒரு நாடகம் 240 அங்கங்கள் கொண்டது என்றும் அதை ஒருமுறை நடித்து முடிக்க மட்டும் இரண்டு ஆண்டுகள் ஆயிற்று என்றும் அறிந்த போது மேலும் வியந்தேன்." அந்த பெரிய நாட்டின் பெரிய நாடகத்தைப் போலவே எல்லா நாடகங்களும் பெரிதாயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டோம்; ஆனால் பெருமை வாய்ந்ததாயிருக்கவேண்டும்-என்றுடஎதிர்பார்ப்ப்ோம். பத்து அங்கங்கள் கொண்ட மிருச்சகடிகம், பெருமை வாய்ந்த நாடகம் என்பதில் ஐயமில்லை. உலக நாடகக் கூறு களையும் வடமொழி நாடக மரபுகளையும் உட் கொண்டுள்ள இந்நாடக ஆசிரியரின் முத்திரையையும். காட்டுகிறது. ஒன்றே செய்தார், அதுவும் நன்றே செய்தார் என்று பாராட்டத்தக்க விதத்தில் சூத்திரகனால் படைக்கப்பட்ட இந்நாடகத்தின் கதை அமைப்பு, காட்சி அமைப்பு, பாத்திரப் படைப்பு ஆகியவற்றை ஏற்கனவே கண்டோம். இங்கே, சூத்திரகன் கையாண்ட ஒரு சில EIILää 3.01565,673 (Dramatic devices) 5tsor(3LTub.

  • One of them was played in 26 parts containing 240 acts; 3. performance took two years to complete!

- Wolfram Eberhard, A History of China. P. 298.