பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - 135 i (அ) போராட்டம் நாடகம் வாழ்க்கையைக் காட்டும் கலை. எனவே வாழ்க்கையில் உள்ள சிக்கல் அல்லது போராட்டம் (Problem or Conflict) #T_45921h இருக்கவேண்டும்: சிக்கல் அல்லது போராட்டம் இல்லாத நாடகம் சிறப்பில்லாத நாடகமே, உப்பில்லாத உணவே. போராட்டம், அகப் போராட்டம், (Inner Conflict) புறப்போராட்டம் (Outer Conflict) என இருவகைப்படும். ஏதாவது ஒன்றுக்கு எதிராகவோ ஆதரவாகவோ நாடகத் தலைவனின் மனத்துக்கண் நிகழும் போராட்டம் அகப் போராட்டம் என்றும் நாடகத் தலைவனுக்கும் தீவினையாளனுக்கும் (Villain) வெளிப்படையாக நிகழும் போராட்டம் புறப்போராட்டம் என்றும் கூறப்படும். சேக்ஸ்பியரின் 'ஹாம்லெட் நாடகத்தில் இருவகைப் போராட்டத்தையும் காணலாம். மண்ணியல் சிறுதேரில் காணும் போராட்டம் புறப் போராட்டமே. நன்மைக்கும் தீமைக்குமிடையே நடைபெறும் போராட்டமே. முதல் அங்கத்தில் பயனில் சொல் பாராட்டும் சகாரன் சாருதத்தனைப் பழிக்கிறான். வசந்தசேனையைத் தன்னிடம் தராவிட்டால் சாருதத்தன் தன் பகைக்குப் பலியாக வேண்டும் என்கிறான். முதல் அங்கத்தில் இப்படி முதல் போடும் சகாரன் எட்டாம் அங்கத்தில் கயமைக் கடையை விரிக்கிறான். ஒன்பதாம் அங்கத்தில் ஊதியம் திரட்டப் பார்க்கிறான். பத்தாம் அங்கத்தில் படுதோல்வியடைகிறான். பிறரைப் பேணும் வணிகனான சாருதத்தன் வெல்கிறான். "சகாரன் ஆற்றிய