பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மண்ணியல் சிறுதேர் சொற்படுதுயர்நிலை சிறிது துய்த்தனன் (X) என்கிறான். இதிலிருந்து இடையில் நன்மை தாக்கப்பட்டாலும் இறுதியில் வெல்கிறது என்று அறிகிறோம். (ஆ) தனிமொழி நடைமுறை வாழ்வில் பித்தனைத் தவிர யாரும் தனியாகப் பேசுவதில்லை. எனவே, வாழ்வின் கண்ணாடியான நாடகத்தில் தனிமொழி (Soliloquy) தேவையில்லை; அது இயல்புக்கு மாறானது என்று இன்றைய நாடக ஆசிரியர்கள் கருதுகிறார்கள். எனினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தோன்றிய நாடகங்களிலும் சேக்ஸ்பியர் நாடகங்களிலும் தனிமொழி பெருமதிப்பிற்குரிய இடத்தைப் பெற்றிருந்ததை மறக்க முடியாது. நாடக மாந்தரின் இதயத்தைத் திறந்து காட்டும் திறவுகோலாகத் தனிமொழியைச் சேக்ஸ்பியர் கையாண்டுள்ளார். அவர் தனித்தன்மை வாய்ந்த, தன்னுடைய கலைத்திறனைப் பல தனிமொழிகளில் காட்டியிருக்கிறார். இருப்பதா, இறப்பதா? என்று தொடங்கும் ஹாம்லெட்டின் தனிமொழியை நம்மால் மறக்கமுடியுமா? - - தனிமொழியை, வடமொழியில் ஸ்வகதம்' (Svagatam) என்பர். மண்ணியல் சிறுதேர்மைத்திரேயனின் தனிமொழியோடு தொடங்குகிறது. சாருதத்தன், சகாரன், சருவிலகன் போன்ற தலைமாந்தர்கள் தனிமொழி பேசு

  • To be or not to be.....

- Hamlet, Act HI, Sc.H.