பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 137 கின்றனர். 'நச்சுப் பொருட் குவியலினுள்ளே புகுந்து வெளி வருவதற்குரிய இடைவெளியைத் தேடும் புழுப்போல யான் செய்த குற்றத்தினின்றும் வெளிப்படுதற்கேற்ற தக்க வழியை அடைந்துள்ள்ேன் (IX) என்னும் சகாரனின் தனிமொழியில் அவன் கொடிய உள்ளம் புலப்படுகிறது. அது 'புத்தியே சகல சக்தியும் என்னும் குடிலனின் தனிமொழியை நினைவுபடுத்துகிறது. சருவிலகன் தனிமொழியில் களவுக் கலை நுணுக்கத்தைச் சூத்திரகன் விளக்கிக் காட்டுகிறார். - (இ) நாடகக் குறிப்பு முரண் நாடகக் குறிப்பு முரண் (Dramatic irony) என்பது ஒருவகை நாடக இயல்பே. இது, ஆழ்ந்த நோக்குடை யார்க்கே புலனாகும். நாடகத்தில், நல்லவன் ஒருவன், தன்னுயிரைப் பறிக்கத் திட்டமிடும் பாவி ஒருவனை ஆருயிர் நண்பனே என்று அழைக்கிறான். நாடகத்தைப் பார்ப்போர், கள்ளிப் பாலைப் பசுவின் பால் என்று கருதும் நல்லவனுக்காகப் பரிவு கொள்வர். ஒதெல்லோ நாடகத்தில் தனக்குக் குழி பறிக்கும், இயாகோவை 'நாணய்மான இயாகோ (Honest Iago) sicipi 9@gsbGavir அறியாமல் அழைக்கிறான். நாம் அவனுக்காக இரக்கப்படுகிறோம். இது சொல்லளவில் புலப்படும் நாடகக் குறிப்பு முரண் (Verbal Irony). சிலம்பில், காவல் வேந்தன் கடிநகர் தன்னில் எனக்குத் தீங்கு நிகழும்; தீங்கு நிகழக் கன்வு கண்டேன் என்று கூறும் கோவலனை + - - - - - மனோன்மணியம், அங்கம்1. களம்V.