பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I38 மண்ணியல் சிறுதேர் நோக்கிப் புறச்சிறையிருக்கை பொருந்தாது மாடமதுரை புகுக என்று கவுந்தியடிகளும் மாடலனும் கூறுகின்றனர்; கண்ணகியையும் கோவலனையும் மதுரை நகருள் சென்று தங்கச் செய்கின்றனர். அவர்கள் நல்ல நோக்கோடு தீங்கை வெல்லலாம் என்ற நோக்கோடு - காவல் மிக்க இடத்தை நோக்கி இருவரையும் அனுப்புகின்றனர். பாவம், அங்கே தான் கோவலன் ஆவியை இழக்கப்போகிறான் என்று அவர்களுக்குத் தெரியுமா? இது, செயலளவில் தோன்றும் Gótůųopger(Irony ofSituation). மண்ணியல் சிறுதேரின் முதல் அங்கத்தில் சாருதத் தனும் மைத்திரேயனும் வசந்தசேனையின் அணிகலன் களைப் பற்றிப் பேசும்போது நாடகக்குறிப்பு முரணைக் காணலாம். அவர்கள் உரையாடல் மூலம் நிச்சயம் அணிகலன்கள் கள்வனால் கவரப்படப் போகின்றன என்று ணர்கிறோம். வழக்கு மன்றத்தில் நிற்கும் சாருதத்தன், வசந்தசேனை வீட்டுக்குச் சென்ற மைத்திரேயன் வந்தால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டைப் பொய் யாக்கலாம் என்று அவனை எதிர்பார்க்கிறான். 'ஏன் காலந் தாழ்க்கின்றான்' என்கிறான். சிறிது நேரத்தில் மைத்திரேயன் வருகிறான்; அவன் தன்னோடு கூற்றையும். கூட்டிக்கொண்டு வருகிறான் என்பது பின்னால்தான் சாருதத்தனுக்குப் புலப்படுகிறது. அவன் வராமலிருந்தால்சகாரனோடு சண்டையிட வாய்ப்பேற்பட்டிருக்காது; அணிகலன்கள் சிதறவேண்டிய அவசியம் நேர்ந்தி ருக்காது. நீதிபதி, வசந்தசேனையைக் கொன்றதற்குச் சரியான சான்றில்லை என்று சாருதத்தனை விடுதலை செய்திருப்பார். இப்படி, நாடகக் குறிப்பு முரணைச் சுவைபட அமைத்துள்ளார் சூத்திரகன். -