பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரண்பாடுகள்; உலகமாந்தரின் ஒட்டுமொத்தக் குணங் களும் இங்கே அலசி ஆராயப்படுகின்றன. சூத்திரகனின் தொன்னூலறிவு மட்டுமன்றிப் பன்னூலறிவும் எடுத்துக் காட்டப்பட்டு இறுதியில் அவனோர் பேரறிவாளன் என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. நாடகத்துள் வரும் தனிமொழி பற்றியும், நாடகக் குறிப்புமுரண் பற்றியும் கூறுவன மணிமொழிகளாக விளங்குகின்றன. நாடகம் உணர்த்தும் அறன் எனும் பகுதி ஆய்வாளரின் திறன் உரைக்கும் பகுதியாக உள்ளது. ஒர் ஆய்வாளரின் மொழிநடைக்கும், கவிஞனின் மொழிநடைக்கும் நிறைய வேறுபாடு இருக்கவே செய்யும். ஆய்வாளரின் நடை சமவெளியில் ஒடுகின்ற ஆறுபோல அமைதியாக நடக்கும். ஒரு கவிஞனின் நடையோ மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் புரளும் காட்டாறுபோலக் குதியும் கும்மாளமும் ஆக இருக்கும். இஃது இருவரின் எண்ணத்தை ஒட்டிய இயல்பின் வண்ணத் தோற்றம். இங்கே ஒரு கவிஞர் ஆய்வாளராக மாறி இருக்கிறார். இவர்தம் மொழிநடை எப்படி? இதோ இப்படி 'மதனிகை சருவிலகன் உள்ளத்தைக் களவாடினாள். சருவிலகனோ சாருதத்தன் வீட்டில் உள்ளதைக் களவாடு கின்றான்." 'சில பெண்களுக்கு முகம் மட்டும் மதியாக இருக்கும். தலை ‘நிம்மதி 'யாக இருக்கும். மதனிகைக்கோ முகத்திலும் மதியிருக்கிறது; தலையிலும் மதி இருக்கிறது. ஆதலால் அவள் மதிக்கத்தக்கவள்." 'வசந்தசேனை புதிய தாமரை மலர் போன்ற கை யழகி; அன்ன நடையழகி; வண்டுகள் மொய்க்கும் வாசமலர் I?