பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மதிப்பீடு 14] iii எச்சம் சூத்திரகன் தகுதிமிக்க, பேரறிவுமிக்க நாடக ஆசிரியர் என்பதற்கு இன்னும் எவ்வளவோ சான்றுகள் காட்டலாம். விரிவஞ்சி சில குறிப்புக்களை மட்டும் நினைவு கூர்வோம்: (1) கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பளிக்கும் விதத்தில் உரையும் பாட்டும் கலந்த நடையில் தம் நாடகத்தைப் படைத்துள்ளார்; கற்பனை வளமும் கருத்தாழமும் ஒசையின்பமும் மிக்க 382 பாடல்களைப் படைத்துள்ளார். (2) நாடக மாந்தரின் இயல்புக்கேற்ப இயல்பான உரையாடல்களை அமைத்துள்ளார். (3) ஒன்பது சுவைகளையும் அவற்றுள் தலைமைச்சுவையாக நகைச்சுவையையும் கையாண்டுள்ளார். (4) எளிமை, இனிமை இவற்றோடு வருணனை, சிலேடை, உவமை, உருவகம், பிற அணி வகைகளையும் கொண்ட நடை சூத்திரகன் நடை. உவமைக்குக் காளிதாசன் (உபமா காளிதாசஸ்ய) என்பர். சூத்திரகனும் ஒர் உவமைக் கவிஞரே. மைத்திரேயன் வளைந்த மரத்தடியை சகாரனின் மனம்போல் வளைந்த தடி (IX) என்றும் விறகுக் கழியை 'ஊழ்வினை போல் வக்கிரமான விறகுக்கழி () என்றும் கூறக் கேட்கிறோம். உவமை என்பது உயர்ந்ததன்மேற்றே! என்பதையறிவோம். எனினும் தாழ்ந்தவன் வாயில் தாழ்ந்த உவமைதானே வெளிப்படும். வசந்தசேனையை நினைத்துத் 'தீயவன் கூறுஞ் சொற்களைப்போல் என் உள்ளத்தினின்றும் அவள் விலகவில்லை'(X) என்கிறான் சகாரன். அவன் குணத்திற்குரிய உவமையைப் பயன் படுத்துகிறார் சூத்திரகன்.