பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைந்த தலையழகி, ஆம். உச்சயினி மாநகரத்தின் தலையழகி" (தலையாய அழகி) தன் வாழ்வின் இன்பத்தைக் குறைக்கப் பிறந்தவள் என்று தெரிந்தும், தன் கொழுநனைக் கூட பிறந்தவள் என்று தெரிந்தும், தன்கூடப் பிறந்தவளாக வசந்த சேனையை ஏற்கிறாள் தூதை' இங்கே நடை அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக ஆய்வில் வெளிப்படுத்தப்பட வேண்டிய பொருள் பின்னுக்குத் தள்ளப்படவில்லை என்பதையும், அழகிய நடையின் வாயிலாகவே ஆய்வுப் பொருள் மேலும் ஆழப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நூலைக் கற்பவர்கள் அறிந்துகொள்வார்கள். கவிஞர் மீரா அவர்கள் வேறு ஆய்வு நூல் எழுதி யிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதுதான் முதல் ஆய்வு நூல் என்று நினைக்கிறேன். மீரா என்றதும் கவிதைதான் நம் கண் முன் தோன்றுகின்றதே தவிர ஆய்வு நூல் தோன்றுவதில்லை. ஆய்வாளராகவும் கவிஞராகவும் இரண்டு முகங்களைப் பெற்றிருந்தும் ஒரு முகம் மட்டுமே (கவிஞர் முகம்) நம் நினைவில் தோன்றக் காரணம் என்ன? முனைவர். வ.சுப. மாணிக்கனார் தலைசிறந்த கவிஞர். அவருடைய கொடை விளக்கையும், மாமலர்கள் என்ற தனிப் பாடல்களின் தொகுதியையும் கற்றவர்கள் அவர் தலைசிறந்த கவிஞர் என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வர். முனைவர். தமிழண்ணல் அவர்களும் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளார். தொடக்கத்தில் அவர் கவிஞராகத்தான் அரங்கில் ஏறினார் என்றாலும் இன்று மாணிக்கனார் என்றதும், தமிழண்ணல் என்றதும் 13