பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற ம 1 தந்தை யார்? 'தண்கதிர் மதியமும் இளவேனில் தலைப்பெய்த பூம்பொழில் போன்று இதயத்திற்கு இனிமை பயப்பது' என்று விபுலானந்த அடிகளாரால் மதிக்கப்படும் மண்ணியல் சிறுதேர், 'மிருச்சகடிகம் : என்னும் வடமொழி நாடகத்தின் நேர்மொழிபெயர்ப்பாகும். மிருச்சகடிகத்தின் ஆசிரியர் பற்றி இன்றுவரை கருத்து வேறுபாடுகள் நின்று நிலவுகின்றன. மிருச்சகடிகத்தின் முன்னுரையில் (Prologue). அதன் ஆசிரியரைப்பற்றிக் குறிப்பிடும் மூன்று பாடல்கள் உள்ளன. "அவை இந்நாடகக்கவிஞன் எழில் நிறையாக் கையும் இன்னிசைப் புலமையும் உடையவன்; வன்மையும் ஊக்கமும் வாய்க்கப் பெற்றவன்; இருக்கு, சாமம் என்னும் வேதங்களையும் கணிதம், காமம், யானை என்பவை பற்றிய கலை நூல்களையும் நன்கு கற்றவன்; அரனருளாலே இருட்படலம் என்னும் பார்வைப் பிணி f மிருத்-மண், சகடிகா-சிறுதேர்: மண்ணால் இயற்றப்பெற்ற சிறுதேர்; சிறுவர் விளையாடுதற்குரியது; அதனையுடையது இந்நாடகமாதலின் இதனை மிருச்சகடிகம் என்பர் நாடக ஆசிரியர்.

  • மிருச்சகடிகத்தில் மூன்று சுலோகங்களில் சொல்லப்படும் பொருள் மண்ணியல் சிறுதேரில் ஒரே ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.