பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 2] என்கிறார். இவை யாவும் ஊகமேயன்றி உண்மை யென்று உறுதியாகக் கூறமுடியாது. உண்மை உதயமாகும் வரை ஆராய்ச்சியாளர் பார்வைக்கு இன்னும் சரியான சான்றுகள் கிட்டும்வரை - மிருச்சகடிகத்தின் ஆசிரியர் வேறு ஒருவர் என்று மெய்ப்பிக்கப்படும்வரை சூத்திரகனே அதன்தந்தை என்று ஏற்கலாம். - சூத்திரகன் என்னும் மன்னர் பெயரை வடமொழி நூல்கள் சில குறிக்கின்றன. சூத்திரகனின் வாழ்வும் வீரதீரச் செயல்களும் சூத்திரக சரிதம், சூத்திரக கதை போன்ற நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. சூத்திரகன் உச்சயினியை ஆண்ட அந்தண அரசர் என்று அவந்தி சுந்தரீ கதாசாரம் என்னும் நூல் கூறுகிறது. இந்தியாவின் பழங்கால வேந்தருள் யாரேனும் ஒருவரை சூத்திரகன் என்று வரலாற்றுச் சான்றுகளுடன் அடையாளங்காட்டி நிறுவ முடியவில்லை. என்றாலும் சூத்திரகன் புவியுலக ஆட்சியும் கவியுலக ஆட்சியும் ஒருசேரப் பெற்றவர் என்று நமடலாம. 'நாந்தீ’ என்னும் நாடகக் கடவுள் வாழ்த்து சூத்திரகனை ஒரு சிவநேசன் என்று அறிமுகப்படுத்துகிறது. இவன், சிவன் அருளால் இருட்படலம் என்னும் பார்வைப் பிணியை வென்றவன் என்று நாடக ஆசிரியரைப்பற்றிய முன்னுரைப் பாடல் மொழிவதை முன்னரே கண்டோம். à

  • Dr. A.B. Keith, The Sanscrit Drama. P.30.

. The name of king Sudraka is found in the Rajatarangini, the Kathasaritsagara and the Skandapurana. - Gaurinath sastri, A Concise History of Classical Sanskrit Literature. P.103.