பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மண்ணியல் சிறுதேர் சூத்திரகன் உட்பட 'காளிதாசன், ஹர்ஷன், பவபூபதி முதலான வடமொழி நாடகப் பேராசிரியரெல்லாருந் தாம் இயற்றிய நாடகக் காப்பியங்களின் முதலிலும் இடை யிலும் ஈற்றிலும், சிவனையே வணங்கியும் வழுத்தியும் செல்வதால் இவர்கள் தென்னாட்டிலிருந்து சென்றவர்களா யிருக்கவேண்டும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது: 2 காலம் மிருச்சகடிகம் அல்லது சூத்திரகனின் காலத்தைத் தெளி வாக வரையறுக்க முடியாது; எனினும் முயல்வோம். சாருதத்தத்தை மூலமாக வைத்துப் புது மெருகோடு படைக்கப்பட்டதே மிருச்சகடிகம் என்று கருதப்படுவதால் சூத்திரகன், சாருதத்ததை இயற்றியவன் என்று நம்பப்படும் பாசனுக்குப்பின் வாழ்ந்திருக்கவேண்டும்; வாமனன் (Vamana) என்பார் மிருச்சகடிகத்தை எடுத்தாள்வதோடு சூத்திரகனையும் சுட்டிக்காட்டுவதால் சூத்திரகன், வாமன னுக்கு (கி.பி.300) முன்னால் வாழ்ந்திருக்கவேண்டும்; அரசியல் சூழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு விசாக தத்தனால் (Visakhadata) புனையப்பட்ட முத்திரராட்ச சத்தில் மிருச்சகடிகத்தின் செல்வாக்கு ஓங்கியிருப்பதால் சூத்திரகன் விசாகத்தத்தனுக்கு முற்பட்டவராயிருக்க வேண்டும்; மொழி நடை, நாடக அமைப்புமுறை முதலிய வற்றைக்கொண்டு நோக்கும்போது ஒருவேளை காளிதாச

மறைமலையடிகள், சாகுந்தல நாடக ஆராய்ச்சி. பக்.12