பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - 23 னுக்கும் முன்னோனாயிருக்கவேண்டும். இவ்வா றெல்லாம் குறிப்பிட்டுவிட்டு இறுதியாக, 'சூத்திரகன் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்திருக்கலாம்; ஆனால் கிறித்து ஆண்டு முறை (Christian Era) தொடங்குதற்கு முன்னுள்ள காலத்தில் இருந்திருக்க முடியாது’ என்று டாக்டர் தேவஸ்தாலி கூறுகிறார்." மிருச்சகடிகத்தின் முதல் அங்கத்தில் சகாரன், வசந்த சேனை என்னும் நாடகத் தலைவியைப் பழிக்கும்போது 'நாணகம் என்னும் நாணயத்தைப் பறிப்பவள்' என்கிறான்." நாணகம் என்ற நாணயம் அல்லது க்ாசு வழக்கத்திற்கு வந்த காலம் கி.பி.40 என்பதால் அதை ஒட்டிய காலமே மிருச்சகடிகத்தின் காலமும் என்பாரு முளர். மிகுதியாகப் பிராகிருதச்சொற்கள் (Prakrits) பயன்படுத் தப்பட்டுள்ளமை, பரதமுனிவன் விதித்த நாடக இலக்கணங்கள் சிலவற்றை (கொலை, துக்கம் முதலிய f சூத்திரகன் காளிதாசனுக்குப் பின்னவர் என்பர் சிலர் -Jagirdar, Drama in Sanskrit Literature. P. 101.

  • Dr.G.V. Devasthali, Introduction to the Study of Mrcchakatika.

P. 8.

  1. இது, மண்ணியல் சிறுதேரில் காசினைப் பறிக்கும் காமன் கைக்கசை'

என்று காணப்படுகிறது. ப.87.

  • Weber (Indian Literature, 205) refers to the use of the word

Nanaka as a term borrowed from the coins of Kanerki who reigned in 40 A. D, and gives Sudraka a subsequent date. —M. Krishnamachariar, History of Classical Sanskrit Literature. P. 575.